• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் கழிவறை சென்றபோது விஷவாயுத்தாக்கி ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பெண்கள் உள்பட 3 பெண்கள் உயிரிழப்பு.

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் கழிவறை சென்றபோது விஷவாயுத்தாக்கி ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பெண்கள் உள்பட 3 பெண்கள் உயிரிழப்பு.

சக்திவேல்

UPDATED: Jun 11, 2024, 10:06:02 AM

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரை சேர்ந்தவர் செந்தாமரை(87) இவர் இன்று காலை தனது வீட்டில் கழிவறை சென்றுள்ளார்.

கழிவறை சென்ற சிறிது நேரத்தில் விஷவாயுத்தாக்கி மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரது மகள் காமாட்சி (45) செந்தாமரையை மீட்க செல்லும் போதும் அவரும் விஷவாயு தாக்கியதில் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

அலரல் சத்தத்தை கேட்ட காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி சென்று பார்க்கும் பொழுது அவரும் மூச்சு திணறி மயங்கி விழுந்துள்ளார். 

இதனை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மூன்று பேரையும் மீட்டனர். இதில் செந்தாமரை மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகியோர் கழிவறையிலே விஷவாயு தாக்கியதில் இறந்துவிட்டனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி இருந்த பாக்கியலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுச் சேர்ந்த 15 வயது சிறுமி செல்வராணி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்தனர் இதில் செல்வராணி உயிரிழுந்து விட்டார் பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவறையில் அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்தது குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிக்காலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறியதால் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். 

தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவு நீர் வாய்க்காலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கழிவறை சென்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 3 பெண்கள் விஷவாயுத்தாக்கி இறந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended