• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்திரமேரூர் அருகே குடி தண்ணீருக்காக சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் வெயிலில் அலையும் பெண்கள்.

உத்திரமேரூர் அருகே குடி தண்ணீருக்காக சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் வெயிலில் அலையும் பெண்கள்.

லட்சுமி காந்த்

UPDATED: Aug 2, 2024, 6:42:06 AM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்

ஒன்றியம் ராவுத்தர் நல்லூர் ஊராட்சி ஏட்டிபாளையம் என அழைக்கப்படும் அருந்ததியர் பாளையம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  

உத்திரமேரூர் வந்தவாசி பிராதன சாலையில் அமைந்துள்ள ஏட்டிப்பாளையத்தில் பல ஆண்டு காலமாக வசித்து வரும் இந்த மக்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில் விளக்கு வசதிகள், சாலை வசதிகள், பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடித்தண்ணீர் மேல் நீர்த்தேக்க தொட்டி ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.

குடித்தண்ணீர் தேவை அதிகரிப்பதை முன்னிட்டு அருந்ததியர் மக்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று கடந்த ஆட்சியில் மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. 

அதன்படி, கடந்த 2020 / 2021 ஆம் ஆண்டு ஊராட்சித் துறை பொது நிதியிலிருந்து சுமார் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், இப்பகுதி மக்களின் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதியதாக கட்டப்பட்டது.

குடித்தண்ணீர் பிரச்சனை

பணி முழுமையாக நிறைவு பெறும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்தது. 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரையில் அதில் இருந்து விநியோகிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்கான விஷயம்.

கோடை காலத்தில் அருந்ததியர் மக்கள் குடித்தண்ணீருக்காக சுமார் 1/4 கிலோ மீட்டர் தூரம் அலையாய் அலைந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்றத்தில் பலமுறை மனு கொடுத்து தீர்மானம் இயற்றப்பட்டும், திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ராஜ் என்பவர் , வேண்டுமென்றே இந்த மக்களின் வேண்டுகோளை புறக்கணித்து வருகிறார் என அப்பகுதி மக்கள் மிகுந்த ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அருந்ததியர் என்ற காரணத்துக்காகவே அருள்ராஜ் எங்களை வஞ்சிக்கின்றார் என புலம்பினர். 

Latest Utramerur News

குடித்தண்ணீர் பிரச்சனைக்கும் பட்டா பிரச்சனைக்கும் எந்த விதமான உதவியும் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் செய்யாத காரணத்தினால் மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் மாவட்ட ஆட்சியரிடம் இவர்கள் மனு அளித்தனர்.

இதைப் பற்றி பகுதியை சேர்ந்த ஜெயசீலி என்ற பெண்மணி பேசும்போது, இந்தக் கோடை காலத்தில் குடிதண்ணீருக்காக நாங்கள் அலையோ அலையோ என அலைந்து கொண்டுள்ளோம். ஏற்கனவே பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீத்தக்க தொட்டியையும் ஊராட்சி மன்ற தலைவர் கைவிட்டு விட்டார்.

அதேபோல் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் கண்டுகொள்ளாமல் உள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் இரண்டு வருடத்திற்கு முன்பு பாதி வீடுகளுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. அந்த குழாய்களில் தற்போது வரை காற்று மட்டும் தான் வருகின்றது.

இது தொடர்பாக திமுக கட்சியை சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் இடம் எவ்வளோ முறை முறையிட்டோம் அவர் எங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றார். 

திமுக

அதனால் தான் நாங்கள் முதல் கட்டமாக எங்கள் பகுதியிலிருந்து 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குடி தண்ணீர் வழங்காமல் வஞ்சிக்கின்ற திமுக அரசை கண்டித்து கோஷமிட்டோம் என தெரிவித்தார்.

நாங்கள் தண்ணீர் இன்றி வாழ்வதா சாவதா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதே நிலை நீடித்தால் சாலை மறியல் உள்ளிட்ட பெரும் போராட்டங்களை கையில் எடுப்போம் என உறுதிப்பட பேசினார்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான கே.சுந்தர் தொகுதியிலேயே குடிதண்ணீர் இன்றி மக்கள் வாடி நிற்கின்றனர். 

பணி முடிந்து தயார் நிலையில் உள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கே. சுந்தர் கொண்டுவருவாரா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பேட்டி 1. ஜெயசீலி குடும்பத்தலைவி அருந்ததியர் பாளையம்

 

VIDEOS

Recommended