• முகப்பு
  • அரசியல்
  • ஒரு நாள் மழையோடு நின்றதால் சென்னை முழ்காமல் தப்பித்தது இயற்கைக்கும், இறைவனுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும் - ஆர்.காமராஜ்

ஒரு நாள் மழையோடு நின்றதால் சென்னை முழ்காமல் தப்பித்தது இயற்கைக்கும், இறைவனுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும் - ஆர்.காமராஜ்

தருண்சுரேஷ்

UPDATED: Oct 17, 2024, 1:57:19 PM

திருவாரூர் மாவட்டம்

அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார். 

முன்னதாக அதிமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், மற்றும் அதிமுகவினர் ருக்மணிபாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளருக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது. 

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் 

1972-ல் அதிமுக மக்கள் இயக்கத்தை தொடங்கி 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சிதலைவி அம்மா, தொடர்ந்து எடப்பாடியார் அவர்கள் வலிமையாக ஆட்சி செய்த தலைவர எடப்பாடியார். 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி. 

6 மாத காலமாக எந்த ஒரு ரேஷன்கடையிலும், துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என ஒவ்வொரு மாதமும் கூறுகின்றனர்

தீபாவளி

தீபாவளிக்கு மக்களுக்கு கொடுக்கப் போகிறோம் என்று டோக்கன் கொடுத்திருக்கிறார்கள் இத்தனை டன் பாமாயில் , துவரம்பருப்பு கொடுக்கப் போகிறோம் என்று உணவுத்துறை அமைச்சர் கணக்கு சொல்கிறார் பேப்பரில் எழுதி வாயில் வைத்தால் இனிக்குமா என்ன அது பேப்பரில் வருகிற செய்தியாக தான் இருக்குமே தவிர இதுவரை மக்களுக்கு கொடுப்பதற்கு தயாராக இல்லை தமிழக மக்களுக்கு தீபாவளி பண்டிக்கை ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும்.

அம்மா உணவகம் இலவச உணவு வழங்கபடும் என தமிழக முதல்வர் அறிவித்தார். உலக தலைவர் பாராட்டிa திட்டம். அம்மா உணவகத்தை திமுக அதனை முடக்க நினைத்தால் 2026ல் இரண்டு மடங்கு வீரிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திமுக 

ஒரு நாள் மழையோடு நின்றதால் சென்னை முழ்காமல் தப்பித்தது. இதற்கு இயற்கைக்கும், இறைவனுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நாள் மழைக்கே மக்கள் அனைவரும் அவதிப்பட்டார்கள். 

மழைநீர் வடிகாலை திமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடித்த வருகிறது என்றார்.

 

VIDEOS

Recommended