விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி பரவலாக கொட்டி தீர்த்த மழை.

செ.சீனிவாசன்

UPDATED: Aug 8, 2024, 8:28:15 AM

நாகப்பட்டினம் மாவட்டம் 

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

குறிப்பாக இரவு ஆழியூர், கீழ்வேளூர், கூத்தூர், பட்டமங்கலம், இருக்கை, இராதாமங்கலம்,தேவூர், வெண்மணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியது.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள லேசான இடி மின்னலோடு கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மழையும் பரவலாக பெய்வது, நாகை மாவட்ட விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended