தேவர் குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

கார்மேகம்

UPDATED: Oct 23, 2024, 12:07:20 PM

இராமநாதபுரம்

தேவர் குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

( தேவர் குருபூஜை)

வருகிற 30- ந்தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடக்கிறது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது அமலில் உள்ள 163(1) தடை உத்தரவின்படி தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது 

Latest Ramanathapuram District News

இருசக்கர வாகனங்கள் டிராக்டர் ஆட்டோ போன்ற வாகனங்கள் சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ நடை பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது தலைவர்களுடன் செல்லும் பொழுது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் சொந்த நான்கு சக்கர வாகனங்களில் தேவர் குருபூஜைக்கு செல்பவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று வரவேண்டும் 

( அஞ்சலி செலுத்தும் நேரம்) 

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் 25/10/2024 - ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended