• முகப்பு
  • குற்றம்
  • நண்பர் வீட்டு மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை - கொலையா தற்கொலையா ?

நண்பர் வீட்டு மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை - கொலையா தற்கொலையா ?

JK

UPDATED: Apr 21, 2024, 9:46:47 AM

திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன். இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகள் ஜெய்ஸ்ரீ (18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார்.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிஷோர் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளார் .இந்த நிலையில் வடக்கு சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு பின்புறம் உள்ள மாடியிலிருந்து நேற்று இரவு சந்தித்துள்ளனர் இப்போது இதற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது ஜெயஸ்ரீ மாடியில் இருந்து கொதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு உள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை நண்பர்கள் உதவியுடன் காதலன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெய்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜெயஸ்ரீயின் தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதலன் கிஷோர் நண்பர்கள் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் கூறப்படுகிறது.

எனவே இது திட்டமிட்ட கொலையா? அல்லது? தற்கொலைக்கான என்பது குறித்தும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended