• முகப்பு
  • குற்றம்
  • கேரள மாநிலம் திருச்சூர் ஏ.டி.எம் கொள்ளை - நாமக்கலில் சிக்கிய கண்டைனர் விவகாரம் குறித்த கோவை தொடர்ச்சி செய்தி.

கேரள மாநிலம் திருச்சூர் ஏ.டி.எம் கொள்ளை - நாமக்கலில் சிக்கிய கண்டைனர் விவகாரம் குறித்த கோவை தொடர்ச்சி செய்தி.

ராஜ் குமார்

UPDATED: Sep 27, 2024, 1:24:23 PM

கேரள மாநிலம்

திருச்சூரில் இன்று அதிகாலை சுமார் மூன்றிலிருந்து நாலு மணி அளவில் மூன்று ஏ.டி.எம் களில் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று இடங்களிலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

மொத்தமாக ஏ.டி.எம் களில் இருந்த தகவலாக கூறப்படும் தொகை சுமார் ரூ.68 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கின்றனர்.

இதை அடுத்து உஷாரான கேரள போலீஸ் கொள்ளையர்கள் தப்பி செல்ல வாய்ப்பு உள்ள வழிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். 

அதே போல கொள்ளை குறித்து தமிழ்நாடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Latest Crime News In Tamil

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று, நாமக்கல் மாவட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று இருக்கிறது. 

சாலையில் சென்றுக் கொண்டு இருந்த பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றையும் இடித்து விட்டு தாறுமாறாக ஓடியிருக்கிறது. 

இதை அடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். 

தகவலை அடுத்து போலீசார் லாரியை தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர். 

ஆனால் போலீசாரின் வாகனங்களை மோதி விட்டு லாரியில் தப்ப முயற்சித்து உள்ளனர். 

இதை அடுத்து சுமார் 30"க்கும் மேற்பட்ட பைக்குகளில் துரத்தி சென்று லாரியை போலீசார் மடக்கி பிடித்து உள்ளனர். 

ஆனால் எதிர்பாராத நேரத்தில் லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட்டு முயன்று உள்ளனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 

செக்போஸ்ட்டில் நிற்காத லாரி துப்பாக்கியை கொண்டு தாக்க முயன்ற மர்ம நபர்கள் யார் இவர்கள்.? 

எதற்காக சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றனர்..? என்கிற கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

லாரி மூலம் தப்பிக்க முயன்றவர்கள் ஹரியானாவின் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. 

பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் கட்டுக் கட்டாக பணமும் சொகுசு காரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 

ஏ.டி.எம் கொள்ளை

கேரளாவில் ஏ.டி.எம் களில் கொள்ளை அடித்து விட்டு கொள்ளைக்கு பயன்படுத்திய காரை கண்டெய்னர் லாரியில் பதுக்கி தப்ப முயன்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

இதனை அடுத்து இறந்தவரைத் தொடர்ந்து கண்டைனர் லாரியில் இறந்த ஆறு நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். 

அப்பொழுது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அஸ்ரலி என்பவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து காவல் துறை பாதுகாப்புடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended