செயல்படாத நகராட்சி நிர்வாகத்தால் களத்தில் இறங்கிய திருவேற்காடு கவுன்சிலர்.

Bala

UPDATED: Oct 16, 2024, 1:57:53 PM

திருவேற்காடு

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு, SKDJ பள்ளி அருகில் உள்ள பிரதான சாலையில் மழை பெய்து குளம்போல் தேங்கி கிடந்தது. 

அதுமட்டுமல்ல இச்சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகியதால், 12வது வார்டு கவுன்சிலர் திருவேற்காடு நகராட்சிக்கு பலமுறை புகைப்படத்தையும் வீடியோக்களையும் குறிப்பிட்டு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார். 

Breaking News In Tamil Today

இதனால் அவர் தனது சொந்த செலவில் ஜல்லி போட்டு, JCB வண்டி வைத்து சாலையை சீரமைத்துள்ளார்.

இதன் மூலமாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகமும், நகராட்சி அதிகாரிகளும், நகர மன்ற தலைவர் அவர்களும் எங்களைப் போன்ற நகர மன்ற உறுப்பினர்களுக்கும் எங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தாங்கள் அளிக்கும் மரியாதையை நாங்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொண்டோம்.

தங்களது விரைவான நடவடிக்கைக்கு எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள் என்று  ஜானகி சுடலைமணி ( நகர மன்ற உறுப்பினர் 12 வது வார்டு ) தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended