• முகப்பு
  • குற்றம்
  • ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களிடம் 1 கோடி ரூபாய்க்கும் மேல் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் ஏமாற்றியதாக புகார்.

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களிடம் 1 கோடி ரூபாய்க்கும் மேல் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் ஏமாற்றியதாக புகார்.

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 27, 2024, 7:00:35 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையத்தை சுற்றி உள்ள கிராம மக்களிடம் கோவையை தலைமை இடமாகக் கொண்டு மோகன்ராஜ் என்பவர் நடத்தி வரும் நேரடி விற்பனை நிறுவனம், குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாகவும், உறுப்பினர்களை இணைத்தால் அதிக பணம் தருவதாகவும் விளம்பரப் படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் சிலர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

டிரான்ஸ் இந்தியா நிறுவனம்

அங்கு ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகளாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட மகேஸ்வரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் ரூபாய் 10,000 கட்டி அடையாள அட்டை வாங்கும் நபர்களுக்கு வாரம் ஆயிரம் ரூபாய் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும், குறைந்தபட்சம் ஐந்து அடையாள அட்டை ரூபாய் 50,000 செலுத்தி வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு வாரம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Crime News Today In Tamil 

இதனை நம்பிய கிராம மக்கள் பணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சில வாரங்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்கிய நிறுவனம், கூடுதல் உறுப்பினர்களை இணைத்து விட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் கணவரை இழந்தவர்கள் மற்றும் கணவனால் கை விடப்பட்டு தனித்து வாழ்ந்து வந்த பெண்கள்.

Breaking News Today In Tamil 

எனவே தாங்கள் கட்டிய தொகையை இழந்து விடக்கூடாது என்பதற்காக, தங்களது உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கிராம மக்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு பின் உறுப்பினர்களாக இணைத்துள்ளனர்.

கர்ப்பம் தரிக்கும் வகையிலான மருந்து, சிறுமிகள் விரைவில் பருவமடைவதற்கான மருந்து, சத்து மருந்து என விலை மதிப்பு மிக்க பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு பிறகு பணம் வழங்குவதை அந்த நிறுவன ஊழியர்கள் அடியோடு நிறுத்தி உள்ளனர்.

Latest Rajapalayam News in Tamil 

இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிராம மக்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். நிறுவன பிரதிநிதிகள் மகேஸ்வரன் அனிதா ஆகியோரை பிடிக்க முடியாத நிலையில், ஏமாற்றியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் புகார் அளிக்க சென்றனர்.

அப்போது தங்களை ஏமாற்றிய ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தினர் புதிய உறுப்பினர்களை இணைப்பதற்காக தனியார் அரங்கில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த ஏமாற்றப்பட்ட மக்கள் நேரடியாக அந்த கூட்ட அரங்குக்கு சென்றனர்.

அங்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த செழியன் என்பவர் இருந்தார். அவரிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் அங்கிருந்து காரில் ஏறி தப்ப முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களிடமிருந்து மீண்டும் தப்பிச் சென்ற அவர், வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இதனை அடுத்து தங்களிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டு தருமாறு கோரி பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

 

VIDEOS

Recommended