• முகப்பு
  • குற்றம்
  • பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது கிரேன் கயிறு அறுந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலி.

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது கிரேன் கயிறு அறுந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலி.

ஆனந்த்

UPDATED: Aug 20, 2024, 7:12:52 PM

சென்னை

பூந்தமல்லியில் இருந்து கிண்டி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி விறு, விறுப்பாக நடந்து வருகிறது இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பில்லருக்கு மேல் பகுதியில் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதன் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

இன்று மாலை ராட்சத கிரேன் உதவியுடன் பாலத்தின் மேல் பகுதியில் தடுப்புகள் அமைப்பதற்காக ராட்சத சிமெண்ட் கான்கிரிட் சிலாப்பை கிரேன் உதவியுடன் மேலே ஏற்றி கொண்டிருந்தனர்.

Latest Chennai District News

அந்த சிலாப்பின் மீது வட மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர சிங்(24), நின்று கொண்டு மேலே சென்று கொண்டிருந்தார். 

மெட்ரோ ரயில் பாலத்தின் மேலே சென்ற போது திடீரென கிரேனில் இருந்த இரும்பு கம்பி அறுந்த நிலையில் ஏற்றி கொண்டிருந்த கான்கிரிட் சிலாப் சரிய தொடங்கியது

இதில் நிலை தடுமாறி மேலே இருந்த வட மாநில தொழிலாளி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இரும்பு கயிறு அறுந்து சிலாப்பும் கீழே விழுந்து உடைந்து இதையடுத்து அங்கிருந்த வட மாநில தொழிலாளர்கள் பதறி அடித்து கொண்டு காயம் அடைந்த தேவேந்திர சிங்கை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

Chennai News 

அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் தேவேந்திர சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து நகரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து போன தேவேந்திர சிங் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் காரணங்கள் ஏதும் இல்லாமல் நடந்த பணியே இந்த விபத்திற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற பணிகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் நடத்த வேண்டிய நிலையில் தற்போது நடத்திய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சிலாப் மேலே இருந்து கீழே விழுந்தபோது அங்கிருந்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended