• முகப்பு
  • அரசியல்
  • மைனாரிட்டி பாஜக அரசு தாக்கல் செய்தள்ள பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை - கனிமொழி.

மைனாரிட்டி பாஜக அரசு தாக்கல் செய்தள்ள பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை - கனிமொழி.

பால முருகன்

UPDATED: Jul 27, 2024, 1:22:35 PM

தூத்துக்குடி மாவட்டம்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை பாரதிய ஜனதா அரசு புறக்கணித்ததாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கனிமொழி

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது "பாஜகவினர் காதுகாளில் தமிழ்நாட்டில் என்ன குரல் எழும்புகின்றது என்று கேட்கும் நிலைதான் உள்ளது.

எனவே முதல்வர் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் டெல்லியில் இருக்ககூடியவர்கள் காதுகளில் கேட்டு அங்கு இருக்கக்கூடிய அரசின் அடிதளத்தை அசைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

திமுக

மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனாரிட்டி அரசாங்கமாக அமர்ந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார், ஆந்திரா தலைவர்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளார்கள்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது.

பாஜக

இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக நினைத்து பாஜக பட்ஜெட்டை தயாரித்து உள்ளனர். பீகாராக இருக்கட்டும் ஆந்திராவாக இருக்கட்டும் இரண்டு மாநிலங்களுக்கும் நிதி அளித்து அந்த மாநிலங்களை முன்னேற்றுவதில் எங்களுக்கு எந்த கருத்துக்களும் கிடையாது.

ஆனால் முதல்வர் சொன்னதுபோல பணத்தை அறிவித்து உள்ளனர். ஆனால் வருமா வராதா என்று யாருக்கும் தெரியாது. 

மு.க.ஸ்டாலின்

எந்த நிதி நெருக்கடி வந்தாலும் அதை செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது.

பாஜக பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பயனாக உள்ளது. 

பிரதமர் மோடி

சாதாரண, சாமானிய கிராமபுற மக்களை பற்றி கவலைபடகூடிய ஆட்சியை விரைவில் உருவாகும். தேர்தல் நேரத்தில் 10-முறை தமிழகம் வந்த பிரதமர் பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு எந்த அறிவிப்பையும் அளிக்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் வேண்டும் என்றார்.

Latest Thoothukudi District News

ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

 

VIDEOS

Recommended