கிராம சபை கூட்டத்தில் தலைவர் துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம்.

L.குமார்

UPDATED: Aug 15, 2024, 10:38:22 AM

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புதுகும்முடிபூண்டி ஊரட்சியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊரட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது 

இதில் ஜல்ஜீவன் திட்டம் அனைவருக்கும் சுகாதார கழிப்பிடம் குடிசை இல்லா வீடு என பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது தொடர்ந்து கிராம வளர்ச்சிக்காக கருத்து கேட்டு அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

கிராம சபை கூட்டம்

இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் எல்லப்பன் ஊராட்சி செயலர் சிட்டிபாபு வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதேபோன்று கும்முடிபூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு ஊரட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊரட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் குப்புசாமி சங்கர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பல்வேறு முறைகேடுகள் ஈடுபடுவதாகவும் எந்த வேலை செய்தாலும் அதற்கு கமிஷன் கேட்பதாக புகார் எழுந்தது

ஊழல்

இதனால் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது பின்னர் காவல்துறையினர் சமரசத்தில் ஈடுபட்டதால் சுமூகமாக கிராம சபை கூட்டம் முடிந்தது 

இதில் ஊராட்சி செயலர் வேத நாராயணன் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி

தொடர்ந்து பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் ஆவூர் ஊரட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊரட்சி மன்ற தலைவர் டில்லிபாபு தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

இதில் ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது இதில் ஊராட்சி செயலர் சசிகுமார் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழா | கிராம சபை கூட்டம் | ஜல்ஜீவன் திட்டம் | ஊழல்

VIDEOS

Recommended