• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 70 வயது மூதாட்டியின் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் நில மோசடி செய்ததாக கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம்.

70 வயது மூதாட்டியின் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் நில மோசடி செய்ததாக கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம்.

சுரேஷ் பாபு

UPDATED: Nov 28, 2024, 10:16:50 AM

கும்மிடிப்பூண்டி 

மேலக்கழனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (70) இவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது மூதாட்டி சரோஜா வசித்து வரும் மூணு சென்ட் பரப்பளவு கொண்ட வீட்டுமனையானது, கடந்த 1998 ஆம், ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை-முருகன் சகோதரர்களிடமிருந்து மூதாட்டி சரோஜாவின் கணவர் சுப்பிரமணி முறையாக பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஆனால் பத்திரப்பதிவில் இருந்த எழுத்து பிழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொன்னேரி வட்டம் பிரளயம் பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் நிலத்தை விற்ற அண்ணாமலையின் மகன் கமல் ராஜ் போலி ஆவணம் மூலம் தனது குடும்ப உறவினர்கள் மீது பத்திர பதிவு செய்துள்ளார். 

Breaking News Today In Tamil

இது தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் போலியாக பத்திரம் செய்யப்பட்ட இடத்தினை தனியார் வங்கிக்கு அடமான பத்திரம் செய்ய விஏஓ கமல்ராஜ் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்த மூதாட்டி சரோஜா சுமார் மூன்று மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து அடமான பத்திரம் செய்யப்படாது என சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்ட மூதாட்டி வீடு திரும்பினார்.

Latest News Today In Tami 

அரசு அதிகாரியே அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதுடன், 70 வயது மூதாட்டியின் நிலத்தை அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ள விஏஓ கமல்ராஜ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கையில் எழுந்துள்ளது.

 

VIDEOS

Recommended