• முகப்பு
  • அரசியல்
  • அரசியல் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். இதனை செய்து காட்டியவர் இந்திரா காந்தி -  எச்.ராஜா

அரசியல் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். இதனை செய்து காட்டியவர் இந்திரா காந்தி -  எச்.ராஜா

JK

UPDATED: Jun 25, 2024, 7:26:32 PM

50ம் ஆண்டு தேசிய அவசர நிலை பிரகடனம் நாளை முன்னிட்டு திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேசிய தலைவருமான எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

50 ஆண்டுகளுக்கு முன்பாக 1975 ஜூன் 25 இந்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரசிகள் சட்டதை முடக்கப்பட்ட நாள் இந்த கருப்பு தினத்தை பற்றி மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும்.

சட்டமன்றங்களை முடக்கி சர்வாதிகார ஆட்சி செய்தது காங்கிரஸ் இந்திரா காந்தி ஊழல் செய்துள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏன் என்றால் மீண்டும் இதே போன்ற அரசியல் விரோத தீய சக்திகள் அரசியல் சட்டத்தை முடக்கிவிட அனுமதிக்க கூடாது.

மேலும் அரசியல் சட்டத்தை படுகொலை செய்தவரின் பேரன் அரசியல் சாசன புத்தகத்தை கையில் எடுத்து வருகிறார்.

சர்வாதிகார ஆட்சி நடத்தியது காங்கிரஸ் . அரசியல் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் அதனை செய்து காட்டியவர் இந்திரா காந்தி. 

இந்த இந்த கருப்பு தினத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

ஸ்டாலினை காப்பாற்ற சிட்டிபாபு சிறையில் செத்து போனவர். சிட்டி பாபு பற்றி ஸ்டாலினுக்கு நினைவு இல்லை நாம் நினைவு படுத்த வேண்டும்.

பாஜகவில் ஜாதி பாகுபாடு பார்ப்ப்பதாக சூர்யா சிவா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு ?

சூர்யா போன்ற தகுதியற்றவர் பற்றி பேச வேண்டாம்.

தமிழ்நாட்டில் தேசிய அளவில் பட்டியலின தலைவர்கள் இருந்து உள்ளனர். எனவே அவர்களை போன்றவர்கள் சொல்வதை கேள்வியாக கேட்க வேண்டாம் என்றார்.

பாஜகவிற்கு மணல் மாஃபியா விடம் தொடர்பு உள்ளது என சூர்யாசிவா கூறி உள்ளார் என்ற கேள்விக்கு?

எதிலும் ஈடுபடாத நபர் , என்னிடம் அவரை பற்றி பேச வேண்டாம் என்றார்.

கள்ளச்சாராயம் குறித்த கேள்விக்கு ?

இந்த அரசாங்கம் தீய நோக்கம் உள்ள அரசாங்கம்.

இந்த விவகாரத்தில் முதல் மூன்று பேர் இறக்கும் போது ஆட்சியர் கொடுத்த அறிக்கை முதர்வருக்கும் , முத்துசாமிக்கும் தெரியாமல் கொடுத்தாரா...?

60பேருக்கு மேல் இறந்து உள்ளனர். அதை மறைக்க நிர்வாகமே முயலுமானல் அது தவறு அரசாங்கத்தின் நோக்கம் பழுதானது.

கள்ளக்குறிச்சி விவகாரம் பாஜக சிபிஐ விசாரணை தேவை என கேட்கிறோம்.

சிபிசிஐடி உங்கள் கைக்கூலி எனவே சிபிஐ விசாரணை தேவை. நீங்கள் தீய எண்ணம் கொண்டவர்கள் உங்கள் கீழ் உள்ள துறை வேண்டாம் என்கிறோம். இதனை முதல்வர் ஏற்றுகொள்ள வேண்டும்.

மாநில அரசை நீக்க பல்வேறு வரைமுறை உள்ளது.

டெல்லி முதல்வர் அரசை நாங்கள் நீக்கவில்லை காரணமாக நாங்கள் இதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம்.

கமல் குறித்த கேள்விக்கு ?

இலவசம் வேண்டாம் என டிவியை உடைத்து பேசிய, திமுக வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என கமல், தற்போது டார்ச் லைட்டை தொலைத்துவிட்டு திரிகிறார். அவர்க்கு நாம் ஏன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றார்.

கள்ளுக்கடை திறப்பு மற்றும் மது விலக்கு பற்றிய கேள்விக்கு ?

பீகாரில் மது விலக்கு வந்து 2ஆண்டுகள் ஆகிறது அங்கு எங்கும் எதும் பெரும் சோகம் நடக்க வில்லை.

தமிழ்நாட்டில் சாராயம் உள்ளபோது மக்கள் ஏன் கள்ளச்சாராயதிற்கு செல்ல வேண்டும்.

இந்த வருடம் 1743 கோடி அதிகமாக டாஸ்மாக் மூலம் மக்களிடம் இருந்து பறித்து உள்ளீர்கள்.

MP கனிமொழி 2019-ல் இந்தியாவில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில் அதற்கு காரணம் டாஸ்மாக் எனவே நாங்கள் வந்தால் டாஸ்மாக்கை உடனே மூடுவோம் என்றார். 

இன்று (இந்து) பத்திரிக்கையில் விதவைகள் குறித்து செய்தி வெளியாகி உள்ளது.

495 பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 495 நபர்களில் 188பேர் விதவை ஆனதற்கு காரணம் குடி. இதனால் குடும்பம் சீரழிந்து உள்ளது. இது 45 ஆயிரம் கோடியை விட அதிகம் இதெல்லாம் முதலமைச்சருக்கு உரைக்க வேண்டாமா.

மேலும் கள்ளுக்கடை கொண்டுவர மாட்டார்கள் ஏன் என்றால் சாராய ஆலைகள் குறைவு எனவே அவர்களிடம் கொள்முதல் செய்ய பணம் வாங்கலாம்.

ஆனால் கள் இறக்க அனுமதித்தால் விவசாயிகளிடம் பணம் வாங்க முடியாது. எனவே கள் இறக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

ராஜாஜி முதல்வர் ஆனவுடன் தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவந்தார். 20 வருடங்கள் மக்கள் குடிக்காமல் இருந்தனர்.

கள்ளு கடையை திறந்த கருணாநிதியின் பையன் தான் தற்போது முதல்வராக உள்ளார்.

கருணாநிதி குடும்பம் தான் தமிழனை குடிக்க வைத்த குடும்பம். இப்போது கூட மது விலக்கை கொண்டுவரலாம்.

எனவே திமுக அரசாங்கம் கள்ளக்குறிச்சியிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended