பிஎஸ்என்எல் சேவை மிக மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி.

ராஜ் குமார்

UPDATED: Oct 28, 2024, 12:42:37 PM

தென்காசி மாவட்டம் சுரண்டையில்

தற்போது நவீன யுகத்தில் இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை தவிர்க்க முடியாததாகி வரும் நிலையில் வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜீபே, போன் பே போன்ற பணப்பரிமாற்றத்திற்க்கும் இன்றியமையாததாக உள்ளது.

இதனால் அனைவர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 4 ஜி சேவை அறிமுகபடுத்தியதாலும், தனியார் செல்போன் கட்டணம் உயர்ந்ததாலும், லட்சக்கணக்கானோர் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினர்.

ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வந்து வர்த்தகம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுரண்டை பகுதியில் பிஎஸ்என்எல் சேவை மிக மோசமான நிலையில் உள்ளது.

பிஎஸ்என்எல்

செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை, கிராஸ் இணைப்பு மற்றும் ரிங் போனாலும் பேச முடிவதில்லை, இன்டர்நெட் சரிவர கிடைக்காததால் வங்கி பணிகள், அலுவலக பணிகள், பணப்பரிமாற்றங்கள் செய்ய முடியாமல் முடங்கி போய் உள்ளது.

இதனை சரிசெய்ய பிஎஸ்என்எல் நிர்வாகம் முன் வருவதாக தெரியவில்லை ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையை தனியார் சேவைக்கு மாற்றினால் சலுகைகள் வழங்குவதாக தனியார் செல்போன் நிறுவனங்கள் அறிவித்து மாற்றி வரும் நிலையில் பிஎஸ்என்எல் சேவையை சரிசெய்யாமல் இருப்பது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது 

இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை

இது சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஒரு சில இடங்களை தவிர்த்துட்டு மற்ற இடங்களில் படுமோசமாக இருப்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆகவே பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிஎஸ்என்எல் சேவை சிரமம் இன்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIDEOS

Recommended