படுக்கைக்கு செல்ல மறுத்ததால் வாய்ப்புக்கள் இழந்தோம் வருமானம் இழந்தோம் என்னைப் போல பலிகடாவான நடிகைகளுக்கு என்ன நியாயம் கிடைக்க போகிறது ?
கார்மேகம்
UPDATED: Sep 3, 2024, 11:03:36 AM
சென்னை
பாலியல் புகார்கள் எழுப்பி என்னைப் போல பலிகடாவான நடிகைகளுக்கு என்ன நியாயம் கிடைக்க போகிறது ? என நடிகை ஸ்ரீ ரெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார்
( புயலை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி)
பாலியல் தொல்லைகள் தரும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்டவர் நடிகை ஸ்ரீ ரெட்டி
தற்போது மலையாளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அவர் நடிகைகள் தாமாக முன்வந்து பாலியல் தொல்லைகள் குறித்து பேசுவதற்கு வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நல்ல சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்
Breaking News
இது குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியதாவது :
( நான் பற்ற வைத்த நெருப்பு)
மீ டூ அமைப்பு குறித்து மீண்டும் பேசப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது முதன் முதலில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக நான் கொடி பிடித்தபோது எனக்கு ஆதரவாக யாருமே குரல் கொடுக்க வில்லை அந்த வருத்தம் இன்றும் எனக்குள் இருக்கிறது ஆனால் இன்றைக்கு நான் பற்ற வைத்த நெருப்பு பெரிய அளவில் வளர்ந்து தொல்லை கொடுத்த நரிகளை ஆட்டம் காண செய்து வருகிறது
பல நடிகைகள் தாமாக முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறித்து தைரியமாக பேசுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் நிறைய பேர் சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் விஷயங்களும் வெளியே வரத்தான் போகிறது
Latest Crime News
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது போல அனைத்து மொழி சினிமாக்களிலும் இது போன்ற அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அப்போதுதான் தவறு செய்தவர்கள் வருந்துவார்கள் தண்டனை அனுபவிப்பார்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும்.
ராதிகா ஊர்வசி சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் தைரியமாக குரல் எழுப்பியுள்ளது பாராட்ட தக்கது எனக்கு நியாயம் கிடைக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு நியாயம் கிடைக்க போகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.