- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உயிரைக் காப்பாற்றதான் முடியவில்லை சடலத்தை கூடவா நன்றாக பராமரிக்க முடியவில்லை - தமிழ்நாட்டில் எதுவுமே சரி இல்லை - இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஈழத்து சகோதரர்கள் குமறல்.
உயிரைக் காப்பாற்றதான் முடியவில்லை சடலத்தை கூடவா நன்றாக பராமரிக்க முடியவில்லை - தமிழ்நாட்டில் எதுவுமே சரி இல்லை - இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஈழத்து சகோதரர்கள் குமறல்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 10, 2024, 7:35:13 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வருவர். இதனால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரம் பாண்டிச்சேரி மாநில நெடுஞ்சாலையிலும் நடைபெறும் விபத்துகளில் இறந்து போனவர்களின் சடலங்களையும், தற்கொலை, விஷக்கடி மற்றும் உடல்நலக் கோளாறால் இறந்து போனவர்களின் சடலங்களையும், ஆதரவு அற்ற நிலையில் இறந்து போனவர்களின் சடலங்களையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டிகளில் வைத்துவிடுவார்கள். உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் அந்தந்த சடலங்கள் ஒப்படைக்கப்படும்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் நிர்மலா தேவி தம்பதிகள். இவர்களின் 4 மகன்களும் ஒரு மகளும் லண்டனில் வசிக்கின்றார்கள்.
காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்ட சிவலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நகை கடை வியாபாரம் செய்து வந்த நிலையில் மகன்கள் அனைவரும் நல்ல நிலையில் வெளிநாட்டில் வேலை செய்வதால் சிவலிங்கம் தன் மனைவி நிர்மலாதேவி உடன் தாமல் பகுதியில் நிம்மதியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த நான்காம் தேதி அன்று சிவலிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து போனார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்ததில் சிவலிங்கம் இறந்து போனது உறுதியாகிவிட்டது.
மேலும் சிவலிங்கத்தின் பிள்ளைகள் அனைவரும் லண்டனில் வசிப்பதால் இறந்து போன சிவலிங்கத்தின் உடல் ஐந்தாம் தேதி விடியற்காலையில் பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்டது.
பிணவறை
சிவலிங்கத்தின் மூன்று மகன்கள் மட்டும் வெளிநாட்டிலிருந்து இன்று காலை விமான மூலம் மீனம்பாக்கம் வந்து அங்கிருந்து தாமல் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று அப்பாவின் ஈம காரியத்துக்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து விட்டு, அப்பாவின் சடலத்தை பெற்றுக்கொள்ள, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர்.
பிணவறையில் வைக்கப்பட்டுள்ள தன் அப்பாவின் சடலத்தை பார்த்த மூன்று மகன்களும் அதிர்ந்து போய் மயக்கம் அடைந்தனர். தன் தந்தை பார்ப்பதற்கு மிகவும் சிவப்பாக மெலிந்த தேகத்துடன் மிக ஆரோக்கியமாக லட்சணமாக இருப்பார். இது என் அப்பாவே இல்லை இந்த உடல் மிகவும் குண்டாக கருப்பாக உள்ளது. என் அப்பாவின் உடல் எங்கே என பிணவறையில் உள்ள ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
பிணவறையில் உள்ள ஊழியர்களும், மருத்துவமனையின் நிர்வாக அலுவலரான டாக்டர் பாஸ்கர் அவர்களும் இதுதான் சிவலிங்கத்தின் உடல் என உறுதி அளித்ததன் பேரில் அழுகிய தோற்றத்துடன் பல மடங்கு பெருகி துர்நாற்றம் வீசும் தன் தந்தையின் உடலை போஸ்ட்மார்டம் செய்ய மூவரும் சம்மதித்தனர்.
உடல் அழுகி துர்நாற்றம்
நமது செய்தியாளரிடம் சிவலிங்கத்தின் மகன்கள் கூறும்போது, எங்கள் தந்தை மிகவும் ஆரோக்கியமான நிலையில் அழகாக காட்சியளிப்பார். மருத்துவமனையின் பிணவரையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால் எங்களுடைய தந்தையின் உடல் அழுகி துர்நாற்றத்துடன் காணப்பட்டது. தந்தை இறந்த சோகத்தில் உள்ள நாங்கள் தந்தையின் அழுகிய உடலை காணும் போது மிகவும் மனம் உடைந்து போய் விட்டோம்.
மருத்துவமனையின் ஊழியர்களிடம் கேட்டால் நிர்வாகத்தை கேளுங்கள் எங்களுக்கு தெரியாது எனக் கூறுகின்றார்கள். உயிரைதான் காப்பாற்ற உங்களால் முடியவில்லை, இறந்து போனவர்களின் சடலத்தை கூடவா ஒழுங்காக பராமரிக்க முடியவில்லை. இதுதான் மருத்துவமனையின் இலட்சணமா? இதுபோன்ற அநியாயத்தை நாங்கள் எங்கும் கண்டதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
நமக்கு தெரிந்த மருத்துவமனை ஊழியரிடம் இதைப் பற்றி கேட்டபோது, பிரேத பரிசோதனை கூடத்தில் சடலங்கள் வைக்கப்படும் குளிரூட்டும் பெட்டிகளின் அறைகள் மற்றும் அதனுடைய கதவுகள் பழுதடைந்து உள்ளதால் ஏசி நீண்ட நேரம் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறுகிறது. அதனால் சடங்கலங்கள் அழுகி போகின்றது .
அதனால் இறந்து போனவர்களின் உறவினர்கள் அழுகிய சடலத்தை கொடுக்கின்றாயே என எங்களை அடிக்க வருகின்றார்கள் . இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை தகவல் அளித்துள்ளோம். அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என ஆதங்கத்துடன் கூறினார்
நிர்வாக கோளாறு
6 சடலங்கள் வைக்கும் அந்த அறையில் குளிரூட்டும் பெட்டிகளின் அனைத்து அறைகளும் பழுதடைந்துள்ளதால் இரண்டு அறைகளின் கதவுகளை கயிறு போட்டு கட்டி உள்ளார்கள். மற்ற நான்கு அறைகளில் சடலங்களை வைப்பதில்லை.
அரசு தலைமை மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இறந்து போனவர்களின் சடலங்களை பேணிக்காப்பது இயலாத விசயமாகி விட்டது. அதுமட்டுமின்றி சடலங்கள் அழுகும் போது மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலேயே பலருக்கு உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மாதத்துக்கு 20 நாள் லீவு எடுப்பதால் , நிர்வாக கோளாறு காரணமாகதான் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
Kancheepuram Government Hospital
இங்கு சடலங்களை வைக்க அனைத்து வசதிகளும் இருந்தும் சடலங்கள் அழுகும் தருவாயில் காணப்படுவதால் இறந்து போனவர்களின் உறவினர்கள் அவ்வப்போது சண்டையிடுவது வாடிக்கையாகிவிட்டது என கூறப்படுகிறது.
எனவே போர்க்கால அடிப்படையில் பிணவறையில் உள்ள அத்தனை சேதமடைந்த ரேக்குகளையும் கதவுகளையும் புனரமைத்தால்தான் இது போன்ற அவல நிலை ஏற்படாது என நோயாளிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
எந்த ஆட்சியிலும் சுகாதாரத்துறையும் சரியில்லை, மருத்துவமனையின் நிர்வாகமும் சரியில்லை . எப்போதுதான் இந்த நிலை மாறுமோ என நோயாளிகள் புலம்புகின்றார்கள்.
பேட்டி.1. சிவரூபன் சிவலிங்கம்.UK