மருத்துவம் பார்ப்பது போல் சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர்
JK
UPDATED: Sep 3, 2024, 7:14:45 PM
திருச்சி
மேலப்புதூரில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாம்சன் லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருகிறார்.
இவர், மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை
இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சன் மீது வழக்கு பதிவு செய்து அவரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest Crime News
மருத்துவம் பார்ப்பது போல் சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் திருச்சி அரசு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு