123 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம்.
ராஜா
UPDATED: Jul 24, 2024, 12:41:47 PM
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் எழுந்தருளியுள்ள புனித பனிமய அன்னை திருத்தலம் 123 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும்.
புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமணி ரோமில் இருந்து கொண்டு வரப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் பழமை வாய்ந்த இந்த புனித பனிமய மாதா ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்துவ இறை மக்களும்,சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.
பனிமய அன்னை திருத்தலம்
மேலும் இந்த திருத்தலத்தில் வழிபடும் மக்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. இவ்வாலயம் அமையப்பெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இறைமக்கள் ஒன்று சேர்ந்து திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இத் திருவிழாவின் நிகழ்வாக பனிமய மாதா சிலை சப்பரத்தில் வைத்து பவானி மேற்கொள்வது வழக்கம்.
அதனை மாற்றி தேரில் மாதாவை பவனி கொண்டு வருவதற்காக புதிதாக தேவாலயத்தின் சார்பில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கியது.
ALSO READ | ராஜபாளையம் அருகே கணிம வளத்துறையின் அலட்சியம்.
Aanmeegam
இந்த தேரானது முழுவதும் தேக்கு மரத்தில் 29.5 அடி உயரமும் 7.5 டன் எடையுடன் கீழிருந்து மேல் பகுதி வரை சிலுவை பொறிக்கப்பட்டும், பக்கவாட்டுகளில் கிறிஸ்துவ போதனைகளை வெளிப்படுத்தும் விதமாக 12 அப்போஸ்தலர்கள் இறைதூதத்தை வெளிக்காட்டு விதமாக 12 (சம்மனஸ் ) வானதூதர்கள் மையத்தில் 5 அடி உயரம் கொண்ட பனிமய மாதாவின் சோரூபம் வைக்கும் வண்ணமாக இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர் மறை மாவட்டத்தில் மாதாவுக்கு என உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தேராக இத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான திருவிழா அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 17ஆம் தேதி புனித பனிமய அன்னை திருத்தலம் பெருவிழா நடைபெற உள்ளது.
இதற்காக இன்று தேர் வெள்ளோட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் நடைபெற்றது.
தேரோட்டம்
முன்னதாக பங்குத்தந்தை ஞான பிரகாசம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை தேரின் முன்பாக நடத்தப்பட்டு திருத்தேரானது இறைமக்கள் மற்றும் ராயப்பன்பட்டி கிராம கமிட்டி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்து வந்தனர்.
தேவாலயத்தில் துவங்கி ராயப்பன்பட்டி நகரின் முக்கிய வீதிகள் தேர் பவனி வரும் வீதிகள் உள்ளிட்டவை வழியாக தேரானது இழுத்துச் செல்லப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இந்த தேர் வெள்ளோட்டத்தில் ராயப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்றனர்.