- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பள்ளி மாணவி தற்கொலை பேச்சு வார்த்தைக்கு பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றுச் சென்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை பேச்சு வார்த்தைக்கு பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றுச் சென்றனர்.
JK
UPDATED: Nov 10, 2024, 5:03:47 PM
திருச்சி மாவட்டம்
மணச்சநல்லூர் அடுத்துள்ள சித்தம்பூர் சேர்ந்த மறைந்த முருகசாமி மற்றும் அஞ்சலை தம்பதியின் மகள்கள் ஹரிணி (15) மற்றும் திவ்யா (16) இருவரும் முசிறி அடுத்துள்ள திருஈங்கோயி மலைப் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
ஹரிணி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடிச்சதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ஆசிரியர் அவரை கண்டித்ததால் மன உளைச்சல் இருந்த ஹரிணி விடுதியில் உள்ள உடை மாற்றும் அறையில் கூப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் முசிறி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், வாங்க மறுத்தனர்
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் கலைவேந்தன் மற்றும் குரு அன்புச்செல்வம் ஆகியோர்முசிறி கோட்டாட்சியர் ஆரஅமுதாதேவசேனா மற்றும் வட்டாட்சியர் சேக்கிழார், காவல்துறை முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முசிறியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் அருகில் இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதனை முசிறியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனுமதி அளிக்கப்படும் என கூறினர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்ததை தொடர்ந்து காவல்துறையின உறவினர்கள் பிரேத பரிசோதையின் போது அருகில் இருக்க அதற்கு மறுப்பு தெரிவித்து அனுமதி இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர் புல்லட்லாரன்ஸ், கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன்,
தோழர் பாலன், மகளிர் விடுதலை இயக்கத்தில் மாநில நிர்வாகி லெட்சுமி பிரியா மண்ணச்சநல்லூர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் முசிறி கோட்டாட்சியர் ஆராமுததேவசேனா, மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அனுமதி அளிக்க முடியாது என எனக் கூறியதை அடுத்து பிரேத சோதனை நிறுத்தி வைத்தனர்.
தொடர்ந்து திருச்சி தாசில்தார் அருள், கோட்டாட்சியரும், காவல்துறையினரும், பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பு அவரது பெற்றோர்கள் பார்வையிட்ட பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.
உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் பெற்றோர் ஒப்படைத்த போது அவர் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனை செய்ததால் மாணவியின் உடலை இரவோடு இரவாக தெற்கு சித்தாம்பூரில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.