குண்டாஸ்சை உடைத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணன் , இரண்டு பெண்களை கத்தியால் வெட்டியதால் பெரும் பதட்டம்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 29, 2024, 6:55:34 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கஞ்சா,மணல் கடத்தல், தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் ஏற்பட்டதில் திமுக கட்சியை சேர்ந்த பார்வேந்தன் என்பவரின் தம்பி உதயநிதி என்ற இளைஞரை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர் , வீடு புகுந்து கடந்த ஜூன் மாதம் தாய்,தந்தையின் கண்ணெதிரே வெட்டி கொலை செய்தனர்.
பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர்
இது குறித்து பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோவிந்தவாடி அகரம் கிராமம் பழைய காலனியை சேர்ந்த பிரேம்குமார், பகவதி, சாரதி, கிஷோர், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத், காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் உதயநிதியின் அண்ணன் பாவேந்தன் ஆகிய அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இந்நிலையில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பார்வேந்தன் தன் தம்பியை படுகொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்க துடித்து துடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை பிரேம்குமார் என்ற இளைஞனின் தாய் சிவகாமி (வயது 44), தேவதர்ஷினி (வயது 18) ஆகிய இருவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியால் வெட்டியதில் அவர்கள் இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
Latest Crime News Today In Tamil
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் காயமடைந்த இரண்டு பெண்களையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத் துறையினரும் காவல்துறையினரும் அந்த கிராமத்தில் ரவுடிசம் செய்யும் வாலிபர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.