• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பள்ளி மாணவி தற்கொலை உடலை வாங்க மறுப்பு - விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல். 

பள்ளி மாணவி தற்கொலை உடலை வாங்க மறுப்பு - விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல். 

JK

UPDATED: Nov 10, 2024, 1:47:39 PM

திருச்சி மாவட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த லேட் முருகசாமி மற்றும் அஞ்சலை தம்பதியின் மகள்கள் ஹரிணி (15) மற்றும் திவ்யா (16). இவர்கள் இருவரும் திருஈங்கோய்மலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளனர்.

இதில் ஹரிணி பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் காப்பியடித்ததாக கூறப்படுகிறது. இது ஆசிரியருக்கு தெரிய வர ஹரிணி மன உளைச்சலில் இருந்துள்ளார் .இந்த நிலையில்லாத விடுதியில் உடைமாற்றச் சென்ற ஹரிணி அந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த விடுதி மேலாளர் அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறி ஹரிணியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை

தொட்டியம் காவல்துறையினர் விடுதி காப்பாளர்களர்டம் தீவிர விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில் ஹரிணியின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஹர்லியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கலைவேந்தன் குரு அன்புச்செல்வம் மற்றும் கட்சியினர் பள்ளி நிர்வாகம் தங்களிடம் பள்ளி நிர்வாகம் எதுவும் கூறவில்லை எனவும் அவர்கள் தங்களிடம் பேசும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

இதை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர்

முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சேக்கிழார் டிஎஸ்பி சுரேஷ் குமார் தலைமையில் அமைதி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரியன் உறவினர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பேச்சு வார்த்தையின் படி கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து பள்ளி வளாகத்தையும் விடுதியையும் பார்வையிட்டு விசாரணை செய்ய வேண்டும்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் மேலும் இறந்த மாணவியின் குடும்பத்தினர் பள்ளி விடுதியை பார்வையிட பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Latest Crime News Today In Tamil 

அதன்படி செய்து தருவதாக அமைதி பேச்சுவார்த்தையில் முடிவில் முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னரும் காவல்துறையினர் ஹரிணி உடலை உறவினர்களிடம் காண்பிக்காமல் உடற்கூறு பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 

இதைக் கண்டித்து உறவினர்கள் முசிறி அரசு மருத்துவமனை முன்பு திருச்சி நாமக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனை

சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து ஹரிணியின் உடலை உறவினர்களிடம் காண்பித்து மீண்டும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதன் காரணமாக முசிறி வட்டாட்சியர் அலுவலக வளாகம் மற்றும் முசிறி அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

 

VIDEOS

Recommended