திருப்புல்லாணியில் நியூ செல்வி கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி நகைகள் மோசடி செய்தவர்கள் தலைமறைவு
கார்மேகம்
UPDATED: Jul 15, 2024, 8:08:14 AM
Latest Tamil Crime News
இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணயில் செல்வி கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடி செய்த நிதி நிறுவனத்தார் தலைமறைவாகினர்
இது குறித்து காவல் துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களின் அடகு வைத்த நகைகளை மீட்டு தர கோரி ( கடல் தொழிலாளர்) சங்கம் ஜி. ஐ. டி.யூ. சார்பாக எதிர்வரும் 22/07/2024 திங்கட் கிழமை இராமநாதபுரம் காவல் துறை துணைத்தலைவர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
நியூ செல்வி கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனம்
இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.கருணாமூர்த்தி தெரிவிக்கையில் இப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நகைகளை இழந்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் மேற்படி போராட்டமானது அன்று காலை 10.30. மணி முதல் இரவு வரை நடைபெறும்.
மேலும் இந்த போராட்டத்தில் காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் இல்லை என்றால் இப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவது சம்பந்தமாக அன்றே முடிவு செய்யப்படும்
காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் காவல் நிலையங்களில் இன்ஸ் பெக்டர்டர்கள் எஸ்.சைக்கள் ஆய்வாளர்கள் மக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய மணமின்றி ஏதோ கடமைக்கு செயல்படுகிறார்கள்
Latest District News
காவல் நிலையத்தில் தீர்வு செய்யக் கூடிய பிரச்னையைக் கூட தேவையில்லாமல் நீதி மன்றத்தை நாட சொல்வதும் மக்களை அழக்களிப்பு செய்வதும் பெறும் தொடர் கதையாக இருப்பதினாலும் இது போன்ற மோசடி நபர்கள் உருவாகிறார்கள்
இப்படியான மோசடி நபர்களை காவல் துறையில் உள்ள ஒரு சிலர் மறைமுகமாக ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதால் தீர்வு செய்யக் கூடிய பிரச்னைகளை காவல் நிலையங்களில் தீர்வு செய்யாமல் மக்களை அழக்களிப்பு செய்து நீதி மன்றத்தில் போய் பார்த்துக் கொள் என்று விரட்டுவதனாலும் மக்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்காததாலும் அப்பாவி மக்கள் தேவையில்லாமல் நீதிமன்றத்தை நாடும் நிலை உருவாகிறது
இதனால் நீதி மன்றங்களில் வழக்குகள் தேக்கமடைந்து வருகின்றது எனவே காவல் நிலையங்களில் தீர்வு செய்யக் கூடிய வகையான பிரச்னைகளை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசையும் காவல் துறையையும் வலியுறுத்தவே இந்த போராட்டம் என்று கூறினார்.