மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டு ஒரேநாளில் உடைந்து விழுந்த அவலம்.

சண்முகம்

UPDATED: Aug 9, 2024, 7:40:01 AM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் பேரூராட்சி எதிர்புறம் செல்லும் சாலையில் தற்போது மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்க்காலானது கட்டி முடிக்கப்பட்டு ஒரே நாளில் இடிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த பலரும் திமுக அரசின் கட்டுமானம் இப்படித்தான் இருக்கும் என வேதனை அடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம் நகரத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அரசு அலுவலகங்களாக பார்த்து ஆய்வு செய்து விட்டு சென்றார்.

Latest Cuddalore District News

நகரத்தில் வேறு கட்டுமான பணிகள் ஏதேனும் நடக்கிறதா? என எந்த விதமான ஆய்வுகளையும் செய்யாமல் சென்றது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை நீர் செல்லும் வாய்க்காலானது கட்டி முடிக்கப்பட்டு ஒரே நாளில் பணிகள் நடைபெற்று வரும் போதே உடைந்து விழுந்துள்ளது.

எங்கே ஆட்சியரின் கண்ணில் பட்டு விட்டால் நாம் பலவற்றுக்கு பதில் சொல்ல வேண்டுமே என அதிகாரிகள் இதை ஆட்சியரின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று மறைத்து கவனமாக பார்த்துக் கொண்டதாக பலரும் தெரிவித்துக் வருகின்றனர்.

திமுக

மேலும் இந்த வடிகால் வாய்க்கால் ஒன்றை வைத்தே திமுக அரசின் கட்டுமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணித்து சொல்லிவிடலாம் என அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து மனம் குமுறி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வடிகால் வாய்க்கால் பணிகளையும் உடனடியாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அரசு எவ்வளவு முயற்சித்தாலும் உள்ளூரில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்ட் எடுப்பவர்களின் இது போன்ற செயல்களில் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசின் மேல் இருக்கும் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே தான் இருக்கும்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended