சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்
JK
UPDATED: Sep 10, 2024, 7:06:51 PM
திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ தலைமையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவிச்சந்திபாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணியில் அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் 25பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்டியல்
ஓய்வுபெற்ற நீதிபதி ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தற்போது நகை சரிபார்க்கும் பணியானது இன்று தொடங்கி குறைந்தது 10 நாட்கள் நடைபெறும். இந்த பணியில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தங்கங்களில் 365கிலோ பொன் இனங்களான தற்போது எடுக்கப்பட்டு அதனை சரிபார்க்கப்படவுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
இந்த கோவிலில் சரி பார்க்கப்படும் பொன் இனங்கள் எஸ்பிஐ வங்கி மூலமாக மும்பையில் உள்ள கோல்ட் மெல்ட்டிங் சென்டருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அதனை தங்க கட்டிகளாக மாற்றி கோவில் பெயரில் டெபாசிட் செய்து கொள்ளப்படும். இதனால் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அளிக்கும் வட்டித் தொகையும் கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.