- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு புறக்கணிக்கப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றம்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு புறக்கணிக்கப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றம்.
சண்முகம்
UPDATED: Sep 14, 2024, 7:21:26 PM
கடலூர் மாவட்டம்
புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் , குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கேட்பது தடுக்க மாவட்ட நிர்வாகம் விவசாயி ஒருவர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட வேதனையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற பிறகு விழித்துக் கொண்டு அரசு
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் விவசாயிகள், பொதுமக்கள் பார்வைக்கு படும்படியாக அறிவிப்பு பலகை அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
Agriculture News in Tamil
தற்போது அது செயல்படுத்தப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக லஞ்சத்துக்கு எதிராக எந்த விதமான புகார் அளிக்க கூடிய எண்களும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்து வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய பிறகும் புகார் எண்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படாததால் மாவட்ட நிர்வாகமும் இதற்கு உடந்தையாக இருக்கிறதோ என எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது என விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
உடனடியாக லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி எண்களையும் எழுதிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.