சரக்கு வாங்க சென்ற கூலி தொழிலாளியின் பணத்தை ஆட்டைய போட்டதாக டாஸ்மாக் கடையின் மீது குற்றச்சாட்டு.
சண்முகம்
UPDATED: Nov 14, 2024, 8:35:24 AM
கடலூர் மாவட்டம்
புவனகிரி அருகே குறியாமங்கலம் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்த கடையில் அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் இரண்டு பேர் 500 ரூபாய் கொடுத்து 140 ரூபாய் சரக்கு மது பாட்டிலை வாங்கினர்.
அப்போது விற்பனையாளர்களோ பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் 150 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதம் 350 ரூபாய் சில்லறையை தர வேண்டும். ஆனால் டாஸ்மாக் கடையில் கொடுத்தது ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர்.
டாஸ்மாக்
சரக்கு வாங்கிய கூலி தொழிலாளிகளோ சரக்கு அடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சென்றவர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு திரும்பி வந்து மறதியாக சில்லரை வாங்காமல் சென்று விட்டதாகவும் நீங்கள் ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் குறிப்பிட்டனர்.
நாங்கள் 500 ரூபாய் கொடுத்து சரககு வாங்கினோம் நாங்கள் பணம் கொடுத்ததை நீங்கள் கண்காணிப்பு கேமராவில் செக் செய்தால் பார்க்கலாம் என குறிப்பிட்டபோது அவர்களோ இல்லை இல்லை நீங்கள் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து சரக்கு வாங்கினீர்கள் என டாஸ்மாக் கடையில் இருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்க்க வேண்டும் என்றால் தங்களால் முடியாது எனவும் அது காவல்துறையால் மட்டுமே முடியும், காலையில் வாருங்கள் காலையில் தான் பார்க்க முடியும் என கூறியதால் ஏமாற்றம் அடைந்த கூலித் தொழிலாளிகள் வேதனையோடு திரும்பினார்.
அப்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூட எடுப்பது ஏமாற்று வேலை என்ற போதிலும், இதேபோன்று மீதி சில்லறையும் ஆட்டைய போடுவது எந்த ரகத்தில் சேர்ந்தது என வேதனையோடு முனுமுனுத்து சென்றார்.