புவனகிரி அருகே நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சாலை மறியல் 

சண்முகம்

UPDATED: Aug 12, 2024, 7:17:26 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி

அருகே வளையமாதேவி கிராமத்தில் புவனகிரி விருத்தாசலம் சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் மீது வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதனை தடுக்க தவறிய அரசு மற்றும் அரசின் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை

விரைந்து வந்த போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் சமாதானம் அடையாமல் போராட்டம் நீடித்தது

மேலும் இறுதியாக உடனடியாக இப்பகுதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தாவிடில் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்து விட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் தற்காலிகமாக விபத்து பகுதியில் வைக்கப்பட்ட பேரி கார்டர்களும் பழுதாகி இருந்ததால் அதனால் விபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது.

Latest Cuddalore District News

விபத்து தடுப்பு அம்சங்கள் என்ற பெயரில் விபத்து ஏற்படுத்தும் பேரிகார்டர்களை வைத்துள்ள அதிகாரிகளின் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

ஒரு சில அரசு உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இது போன்ற மக்கள் வேதனை அடைவதும் இன்னல்களுக்கு உள்ளாவதும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது.

 

VIDEOS

Recommended