சேத்தியாத்தோப்பு அருகே அரசின் நியாய விலைக் கடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

சண்முகம்

UPDATED: Aug 12, 2024, 6:51:46 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடை உள்ளது . 

இக்கடைக்கு உட்பட்ட 700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வரும் நிலையில் இவர்கள் காலையிலிருந்து நியாய வலைக் கடைக்கு வந்து காத்திருந்த போது பொருட்கள் எதுவும் வழங்காமல் காக்க வைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தனர்.

இதன் பின்னர் கிராம மக்கள் புவனகிரி- விருத்தாசலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் 

இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தங்களது வேதனையை தெரிவித்த கிராம மக்கள் கூறும்போது தொடர்ந்து இந்த நியாய விலை கடையில் எப்போது வந்தாலும் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும், பொருட்கள் வாங்க வருபவர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் கிராம மக்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் அனைத்து பொருட்களும் எடை குறைவாக வழங்கி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். இது குறித்து தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்.

நியாய விலைக்கடை

முக்கியமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு கணக்கு வழக்கு பார்க்கும் அதிகாரி ஒருவர் நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் அட்டைதாரர்களை கடுமையான வார்த்தைகளாலும் தரக்குறைவாகவும் பேசி வருவதாகவும் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் நாங்கள் இந்த நியாய விலை கடையை புறக்கணிப்போம் எனவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

நியாய விலை கடையில் துளி கூட நியாயம் இல்லை என்றால் என்ன செய்வதென்று புரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

VIDEOS

Recommended