• முகப்பு
  • அரசியல்
  • தமிழக முதல்வர் ஆய்வு என்ற பெயரில்  விளம்பரப்படுத்தி வாட்ஸ் அப் மூலம் மிரட்டி விளம்பரம் செய்து வருகிறார் - சசிகலா

தமிழக முதல்வர் ஆய்வு என்ற பெயரில்  விளம்பரப்படுத்தி வாட்ஸ் அப் மூலம் மிரட்டி விளம்பரம் செய்து வருகிறார் - சசிகலா

தருண் சுரேஷ்

UPDATED: Nov 28, 2024, 7:18:59 PM

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி சோழா திருமண அரங்கில் K கோடீஸ்வரன் இல்ல திருமண விழாவில் மணமக்கள் K அபினேஷ், R.உத்ரா லெட்சுமி ஆகியோருக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து கழக பொதுச்செயலாளர் சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். 

தொடர்ந்து மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அட்சதை தூவி ஆசீர்வதித்தார் திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் நான்காண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான எந்தவித பணியையும் இதுவரை செய்யவில்லை இன்னும் ஓராண்டு தான் பாக்கி உள்ளது.

ஒரு வார காலமாக பெய்து வரும் மழையில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழியுள்ளது. இதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 70 ஆயிரம் ஏக்கரில் 15,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது .

சசிகலா

ஆனால் இது சம்பந்தமாக அரசு எந்தவிதமான நடவடிக்கையில் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக அரசு விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறது இன்சூரன்ஸ் என்ற திட்டம் உள்ளது  விவசாயிகளுக்கு தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இன்சூரன்ஸ் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  

தற்போது தமிழக முதல்வர் ஆய்வு என்ற பெயரில் மாவட்ட தோறும் சென்று அதனை விளம்பரப்படுத்தி வாட்ஸ் அப் மூலம் மிரட்டி விளம்பரம் செய்து வருகிறார்.

இந்த மாதிரி விஷயங்களை தான் இந்த அரசு செய்கிறது மக்களுக்கான அரசாங்கமாக இந்த அரசு விளங்கவில்லை. தமிழக முதல்வர் டெல்டா மாவட்டம் எங்களது மாவட்டம் எனது பூர்வீகம் இந்த மாவட்டம் என்பார் ஆனால் விவசாயிகளை இதுவரை எட்டிப் பார்க்கவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் தற்போது பெய்த மழையில் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது பாம்பன் பகுதி மிகவும் மோசமாக நிலையில் உள்ளது சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

DMK

இந்த அரசு உடைய அமைச்சர்கள் பிறந்த நாளை தனியார் பள்ளியில் கொண்டாடுவதில் மும்முரமாக இருந்து வருகின்றனர். நான் 39 வருட காலமாக இந்த அரசியல் பயணத்தில் இருந்து வருகிறேன். 

விவசாயிகள் மழையில் பயிர்களை இழந்து உள்ள நிலையில் இந்த அரசு பிறந்த நாளை கொண்டாடுவதில் மூலமாக இருந்து வருகிறது இதுதான் அரசின் லட்சணம்.

குறிப்பாக இந்த முதல்வர் மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் என்று நடத்தி விளம்பர நோக்கமாக செய்து வருகின்றனர். முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு ஆய்வு கூட்டம் செல்வது என்பது சாதாரண காரியம் அல்ல.

முதல்வர் பயணத்திற்காக அனைத்து அதிகாரிகளும் பணியில் ஈடுபடும் போது மாவட்டத்தினுடைய அனைத்து நிர்வாகம் முடங்கும்.நிலை உருவாகும்.

முன்னாள் முதல்வர் மறைந்த அம்மா அவர்கள் சென்னையில் இருந்து நிர்வாகம் செய்ததை பார்த்து இந்த அரசு கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரிகளை அங்கிருந்தே அவர்கள் பணியை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையில்லா அரிசி

மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதில் எந்தவித பிரயோஜனமும் கிடையாது.

வாழை சாகுபடி முதலான அனைத்து விவசாயிகளும் தற்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். முதலில் விவசாயிகளது கஷ்டங்களை துடைக்க வேண்டும்..

கடந்த 21 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்ததிலிருந்து தற்போது வரை ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்குவதில் சுமார் 1900 கோடி நஷ்டம் ஆகி உள்ளதாக அரசு சொல்கிறது. இது நம்பக் கூடியதாக உள்ளதா, விவசாயிகள் கொடுக்கும் நெல்லை முறையாக வாங்குவது கிடையாது அனைத்து கொள்முதல் நிலையங்களும் மூடி கிடக்கிறது.

நான் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அங்கு மக்கள் அம்மா இருந்தபோது அம்மா ஆட்சி காலத்தில் விலையில்லா அரிசி20 கிலோ கொடுத்தார்கள். தற்போது 8 கிலோ 9 கிலோ என அளவு குறைத்துக் கொடுக்கிறார்கள். 

திமுக ஆட்சி

கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சி காலத்தில் அம்மா அவர்கள் கொடுத்தது போல 20 கிலோ விலையில்லா அரிசியைஎந்த பகுதியில் கொடுக்கப்படவில்லை. இதே போன்று தான் இந்த அரசு ஒவ்வொன்றும் செய்து வருகிறது' இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

2026 தேர்தலின் போது அம்மா ஆட்சி தான் கட்டாயம் வரும். மக்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர்.

திமுக கடந்த தேர்தலின் போது மக்கள் கேட்டார்களா தேர்தல் அறிக்கையை தாங்கள் தான் கொடுத்தீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னீர்கள். ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகாலம் ஆகிவிட்டது இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்றார்.

 

VIDEOS

Recommended