எம்ஜிஆரை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெண்கள் ஆதரிக்கிறார்கள் - கே.என்.நேரு.
JK
UPDATED: Nov 21, 2024, 12:20:41 PM
திருச்சி மாவட்டம்
திருச்சி மத்திய தேர் மேலும் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ரூபாய் 18 புள்ளி 44 கோடி மதிப்பீட்டில் கூடிவிட்ட திட்டப் பணிகளை திறந்து வைக்கும் நிகழ்வும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டின் ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயன்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முடிவு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு
இன்றைக்கு முடிவற்ற பணிகளை திறந்து வைத்து புதிதாக புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி கிட்டத்தட்ட ரூ. 64 கோடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது திருச்சியில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
எனவே மற்ற நகரங்களை காட்டிலும் திருச்சி அதிகமான பயன்பெற வேண்டும் என்று சொல்லி தான் கிட்டத்தட்ட ரூ.4000 கோடி அளவுக்கு திருச்சிக்கு மட்டும் தந்து இருக்கிறார்கள். எனவே, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பாலங்களைப் பற்றி சொன்னார்கள். ரயில்வேகேட் பாலங்களை பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னும் ஆட்சியில் முடிய ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. எனவே கலெக்டர் அனைத்து வேலைகளையும் விரைவாக நாங்கள் செய்து முடிக்க எம்எல்ஏக்களின் முன்மொழிவை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 1கோடியே 16லட்சம் மகளிர்களுக்கும் உரிமைத்தொகை மாதம் தருவதோடு, இலவசமாக பேருந்து பயண திட்டத்தை தந்துள்ளார்.
திருச்சியில்100பிள்ளைகள் படித்தால் 94பிள்ளைகள் உயர்கல்விக்கு போகிறார்கள் என கலெக்டர் கூறினார். அதற்கு காரணம் படிப்பதற்கு ரூ.1000 நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு குழந்தைக்கு தருகிறார்கள்.
பெரம்பலூரில் 2000 பெண்கள் வேலை வாய்ப்பு தொழிற்சாலையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் நம்முடைய மாவட்டத்திற்க முதலமைச்சர் விரைவில் வர இருக்கிறார்.
அப்போது சிப்காட்டில் ஏற்கனவே ஒப்பந்தமிட்ட 5000 பெண்கள் வேலைவாய்ப்பு வகையிலே புதிய தொழிற்சாலை வர இருக்கிறது. திருச்சி மாநகராட்சியில் ஒரே இடத்தில் கிட்டதட்ட பஸ் ஸ்டாண்ட் மட்டும் ரூ.480 கோடி அளவிலும், புதிய மார்க்கெட் 330 கோடி அளவிலும் அமைக்கப்படுகிறது.
இது தமிழக அரசின் திட்டம், மத்திய அரசின் மூலமாக பாலங்கள் கட்டுவதற்காக ரூ. 900கோடிக்கும் பைபாஸ் கட்டுவதற்காக 3000 கோடி அரசின் சார்பாக திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. குடமுருட்டியில் ஆரம்பித்து பஞ்சப்பூர் வரை 40 அடி அகலத்திற்கு பாதை ஒன்று புதிதாக போடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. எம்ஜிஆருக்கு இருந்த பெண்கள் ஆதரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாண்டிவிட்டார். செல்லும் இடமெல்லாம் நீங்கள் தான் அடுத்தது. உங்கள் உடலை பார்த்துக் கொள்ளுங்கள் என பெண்கள் முதலமைச்சரை பார்த்து கூறுகிறார்கள். உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி.
எனவே வருகிற காலத்திலும் இந்த முதலமைச்சருக்கு உங்களுடைய ஆதரவு என்றைக்கும் இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டு கொள்கிறேன் என பேசினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கே.என்.நேரு பேட்டி
ஏழை மக்களுக்கு சொத்து வரி உயர்வு இல்லை - அமைச்சர் நேரு விளக்கம்
திருச்சி மாவட்டத்தில், 18.44 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம் மற்றும் 46.25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 1,576 பயணிகளுக்கு வழங்கும் விழா, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் கூற மறுத்துவிட்டார்.
மேலும், *தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை* 10 ஆண்டுகாலம் உயர்த்தாமல் இருந்த சொத்து வரி திடீரென்று அதிகப்படி உயர்த்தினால் சிரமப்படுவார்கள் என்பதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகத்துறை எடுத்தது.
600 சதுர அடிக்கு கீழே உள்ளவர்களுக்கு சொத்து வரி இல்லை. 600ல் இருந்து, 1200 சதுரடி உள்ளவர்களுக்கு, 25 சதவீதத்திலிருந்து, 35 சதவீதம் வரையிலும், 1,200 சதுர அடியில் இருந்து, 1,800 சதுரஅடி வரை, 50 சதவீதம், 1,800ல் இருந்து, 2,400 சதுர அடி வரை, 70 சதவீதம் பெரிய வசதி படைத்தவர்களுக்கு, 100 சதவீதம் என சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் அதை நிறுத்தி வைப்பது அரசாங்கத்தினுடைய பணி அதனால் தமிழகத்தில் சொத்துவரி பெரிதாக உயர்த்தப்படவில்லை என்றார்.
மின்சாரத் துறையில் இருக்கும் சொத்துவரி பற்றி எனக்கு தெரியாது மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட வரி லிஸ்ட் என்னிடம் உள்ளது. அதை வேண்டும் என்றால் உங்களிடம் தருகிறேன் என்றார்.
மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் தற்போது மழைக்காலம் என்பதால் சாலை அமைத்தால் சரியாக இருக்காது. அதனால் புதிய சாலை அமைக்க தாமதம் ஏற்படுகிறது
கோவை ஆவடி மாநகராட்சியை தொடர்ந்து திருச்சியிலும் மீட்டர் மூலம், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட்டு கொடுங்கள், 50 கோடி கொடுங்கள் என கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து கேட்டதற்கு.
அது யாரை சொன்னார்களோ அவரைக் கேளுங்கள். என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது" என்றார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்?
எதிர்க்கட்சி சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இல்லை. சிறப்பாக உள்ளது. தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
தமிழக முதல்வர் அதிக முறை திருச்சிக்கு வருகிறேன். மற்ற மாவட்டங்களுக்கு சென்று விட்டு திருச்சிக்கு தமிழக முதல்வர் வருகிறேன் என்று சொல்லி உள்ளார்.
அப்போது, திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மணப்பாறை சிப்காட் தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்" என்றார்.
குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு வணிக பயன்பாட்டிற்கான வரி வசூல் செய்யப்படும். அப்படி இருந்தால் எங்கு என்று சொல்லுங்கள் எங்களுக்கும் வருமானம் கூடும் என தெரிவித்தார்.