அரூர் அருகே ஏரி மண் விற்பனையால் மறைந்து வரும் சுடுகாடு.

சசி குமார்

UPDATED: Oct 6, 2024, 8:42:51 AM

தர்மபுரி மாவட்டம்

தமிழக அரசு அனைத்து ஏரிகளையும் சுத்தம் செய்து ஏரியில் குறிப்பிட்ட அளவில் உள்ள வண்டல் மண்ணை மட்டும் விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் மூலம் ஏற்றி சென்று பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தொட்டம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுமார் 30 ஏக்கரில் அமைந்துள்ள மாங்குப்பம் ஏரியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் உயிர் இழந்தால் இந்த ஏரி பகுதியில் தான் அடக்கம் செய்து வருகின்றனர்.

தற்பொழுது இந்த ஏரியை அடிவரை தோண்டி நுரம்பு மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவதால் பல்வேறு சடலங்களை புதைக்கப்பட்ட இடங்கள் காணாமல் போனதாக கிராமம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Latest Crime News Today In Tamil 

ஏரியில் உள்ள மண்ணை அள்ளுவதற்காக நான்கு பேர் கொண்ட குழு அந்த கிராமத்திற்கு ஒரு தொகையை வழங்கிவிட்டு அதிக லாபத்திற்கு மண்ணை விற்று சம்பாதித்து வருகின்றனர். 

இதனால் எங்கள் விவசாய நிலங்கள் பாதிப்படுகின்றது என தெரிவிக்கும் மக்கள், அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்காமல், அவர்களின் இஷ்டம் போல், ஆழத்தை தோண்டி மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை 

இது குறித்து விவசாயிகள் கேட்கும் போது அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்து கொள்ளுங்கள் தனக்கு கவலை இல்லை என ஏலம் எடுத்தவர்கள் மிரட்டுகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேட்டி : கைலாசம்

 

VIDEOS

Recommended