• முகப்பு
  • அரசியல்
  • தொடர் தோல்வியால் மண்ணை கவிழ்ந்த இ .பி .எஸ் அதிமுக அணி அதிமுக மாவட்ட செயலாளர் பென்ஜமினே காரணமா ?

தொடர் தோல்வியால் மண்ணை கவிழ்ந்த இ .பி .எஸ் அதிமுக அணி அதிமுக மாவட்ட செயலாளர் பென்ஜமினே காரணமா ?

ராஜ்குமார்

UPDATED: Aug 8, 2024, 7:26:05 AM

திருவள்ளூர் மாவட்டம்

திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிமுக விலை போய் உள்ளது.

அதிமுக இனி ஆட்சி பிடிக்காது என நினைத்து திமுகவுடன் கூட்டு சேர்ந்து பணம் சம்பாதிக்க அதிமுக கவுன்சிலர்கள் விலை போனதாக தெரிகிறது.

திருமழிசையில் அதிமுகவை அடியோடு அதிமுகவினரே அழித்துள்ளனர்.

திமுகவுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் கூட்டணி வைத்திருப்பதாக பேசப்படுகிறது.

அதிமுக

திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக, அதிமுக அரசியல் கட்சிகளின் அரசியல் தமிழ்நாட்டில் உற்று நோக்கப்பட்டுள்ளது.

தலைவர் தேர்தல் தொடங்கி துணைத் தலைவர் வரை பெரும்பான்மை அதிமுக கவுன்சிலர்கள் இருந்தும் வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் கட்சியை அடகு வைத்து மறைமுக தேர்தலில் திமுக வெற்றிக்கு அதிமுகவினர் உழைத்திருப்பது வெட்கக்கேடானது.

கடந்த 2022 தலைவர் தேர்தலின்போது அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு கவுன்சிலர்கள் பலத்துடன் 8 கவுனாசிலர்கள் இருந்தனர் ஆனால், திமுக 7 ஆக இருந்தது.

அப்போது திமுகவினர் 6 பெரிதா,? 7 பெரிதா? என சுவர் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஏனென்றால் அதிமுக கூட்டணியில் இருந்த 2 கவுன்சிலர்களை அப்போதே திமுகவினர்  தன் பக்கம் வைத்து இருந்தனர்.

ADMK

அந்த இரு கவுன்சிலர்களை செல்லாத வாக்குகளாக செலுத்த சொல்லி அதிமுகவுக்கு இருந்த 8 பலத்தை 6 ஆக குறைத்துள்ளனர்

அதிமுக வை விட அதிகமாக 7 கவுன்சிலர்கள் பலமாக இருந்த திமுக அப்போது அதன் தலைவராக போட்டியிட்ட வடிவேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட அதிமுக பேரூராட்சி செயலாளரும் அதிமுக கவுன்சிலருமான ரமேஷ் 6 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

திமுக

திமுகவை வெற்றி பெற வைக்க இதில் அதிமுக மாவட்ட செயலாளர் பெஞ்சமினுக்கும் திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர் ரமேஷுக்கும் பங்கு உண்டா? என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது.

இருவர் செல்லாத ஓட்டை அளித்த துரோகிகள் யார் என்று கண்டறிந்து அதிமுக நடவடிக்கை எடுக்காததே இத்தகைய சந்தேகம் எழ காரணமாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்த சமயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருந்திருந்தால் மாவட்ட செயலாளர் பதவியையும், வார்டு கவுன்சிலர் பதவியையும் தங்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பார்.

ஆனால் இவ்வளவு நடந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுகு அளவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

அதன் பின்னால் நடந்த மறைமுக துணைத் தலைவர் தேர்தலில் திமுக தரப்பில் மகாதேவனும், அதிமுக தரப்பில் வேணுகோபாலும் போட்டியிட்டனர்.

திமுகவுவின் பலம் 7 ஆக இருந்தது  அப்போது அதிமுக பலம் 8 ஆக இருந்தது.

ஆனால், தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிமுக ஆதரவு அளித்த பாமக கவுன்சிலர் ராஜேஷ், சுயேச்சை கவுன்சிலர் லதா, துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பாமக சுயேச்சை கவுன்சிலர் திமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.

அதிமுக கவுன்சிலர்கள்

தன்னிடம் 7 கவுன்சிலர்களாக இருந்த பலம் 9 ஆக அதிகரித்தது.

ஆனால், அதிமுக கூட்டணி 8 ஆக இருந்தது ஆனால் அதிமுக கவுன்சிலர் ரவி யால்  சரிந்தது.

மறைமுக தேர்தலில் அதிமுக 6 ஆக இருந்தது.

அதில் ஒரு கருப்பு ஆடும் துணைத் தலைவருக்கு வாக்கு அளித்ததால் 10 வாக்கு பெற்று துணைத்தலைவர் தேர்தலில் மகாதேவன் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவருக்கு போட்டியிட்ட வேணுகோபால் 5 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் வடிவேலு சாலை விபத்தில் உயிரிழந்ததால் பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Latest Tamilnadu Political News in Tamil

தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு அதிமுக எந்தவித நகர்வும் இல்லாமல் திமுக வெற்றி பெற வழிவிட்டு தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் மறைமுகமாக திமுக வெற்றிக்கு அதிமுக உழைத்து உள்ளது என்றே சொல்லலாம்.

மொத்தம் 14 வார்டு கவுன்சிலர்களில் 50% மேல் அதாவது 8 வார்டு கவுன்சிலர்கள்  திமுக தலைவருக்கு ஆதரவு அளித்ததாலும், அதிமுக கட்சி கவுன்சிலர் தலைவர் தேர்தலுக்காக போட்டியிடாமல் மறைமுக தேர்தலை புறக்கணிப்பு செய்ததனர்.

திமுக தரப்பில் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த எட்டாவது வார்டு கவுன்சிலர் தற்போது துணைத் தலைவராக உள்ள மகாதேவன் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெங்கடேசன் அறிவிப்பு செய்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர் பெஞ்சமின்

தொடக்கம் முதலே அதிமுகவை திமுகவுடன் அடகு வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களும், மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் மீது இபிஎஸ் நடவடிக்கை பாயுமா? என்பதே திருமழிசையில் உள்ள கடை கோடி அதிமுக தொண்டனின் குரலாக உள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக கவுன்சிலர் வேலு கட்சிக்கு துரோகம் செய்துள்ளார், அவரையும் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், அதிமுக கவுன்சிலர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி நடவடிக்கை எடுப்பாரா? திருமழிசையில் உள்ள கடை கோடி அதிமுக தொண்டர்களின் மனக்குமுரலாக இருந்து வருகிறது.

 

VIDEOS

Recommended