திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம்.

ஜெயராமன்

UPDATED: Apr 29, 2024, 6:02:26 AM

கில்லி  ரீ ரிலீஸ்

சமீபகாலமாக தமிழில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான ‘Actress Upasana RC ’ திரைப்படம் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது.

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு இப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்லலாம். வித்யாசாகர் இசையில் வெளியான எல்லா பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.

சமீப காலமாக தமிழகத்தில் பழைய திரைப்படங்களின் மறு வெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது அந்த வகையில் சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்றன.

விஜய் நடித்த ‘கில்லி’ ரீ ரிலீஸ்

அந்த வரிசையில் தற்போது விஜய் நடித்த ‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்களின் சிறப்பான கொண்டாட்டங்களுடன் வெளியான கில்லி திரைப்படம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகி ஓடிக் கொண்டுள்ளது.

கில்லி ரீ ரிலீஸ் ஹவுஸ்புல்

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பகுதியில் உள்ள தைலமைத் திரையரங்கில் வெளியிடப்பட்ட கில்லி திரைப்படம் தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகி ஓடிக் கொண்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் குத்தாட்டங்கள் போட்டு கில்லி படத்தினை ரசித்து வருகின்றனர். இளைஞர்கள் முதல் இளம் பெண்கள் வரை ஏதோ புது படம் ரிலீஸ் ஆகி ஓடுவது போல் படத்தில் வரும் அனைத்து பாடல்களுக்கும் நடனம் ஆடி திரையரங்கினை அதிரசெய்தனர்.

 

VIDEOS

Recommended