• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.

ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: Aug 7, 2024, 9:31:44 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் 

பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளி வளாகத்திற்குள் மழை நீரும் கழிவு நீரும் குளம் தேங்கி நிற்கிறது.

இந்த நீரை வெளியேற்ற பள்ளி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் முன்கூட்டியே எடுக்காததால், மழை நீரூம் கழிவுநீரூம் குளம் போல் தேங்கி நிற்கின்றது. 

Kancheepuram District News in Tamil

மாணவ மாணவிகள் தேங்கிய நீரில் நடந்து தங்களுடைய வகுப்பறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு வகுப்பறையில் விட்டு விட்டு செல்கின்றனர். 

ஒரு சில பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் மழைநீரை ஏன் அகற்றவில்லை எனக் கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. அதனால் வருத்தம் அடைந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. 

Latest Kancheepuram News & Live Updates

பள்ளியில் தேங்கியுள்ள நீரில் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. அதேபோல பாம்பு, பூச்சி போன்ற விஷ ஜந்துக்கள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவ மாணவிகளுக்கு தேங்கி நிற்கும் கழிவு நீரால் ஏதாவது உடல் உபாதைகள் அல்லது தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக , தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended