- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் அடாவடித்தனத்தை கண்டித்து அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் அடாவடித்தனத்தை கண்டித்து அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
ராஜ்குமார்
UPDATED: Jul 13, 2024, 10:03:35 AM
Latest Thiruvallur News
திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையின் அடாவடி போக்கை கண்டித்து வருகின்ற ஜூலை 23 அன்று திருவள்ளூரில் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் இடித்து தள்ளப்படுகின்றது மாற்று இடம் கூட வழங்காமல் வீடுகள் அகற்றப்படுவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன.
Thiruvallur News Today Tamil
ஆர் கே பேட்டை , எஸ் வி ஜிபுரத்தில் திடீரென்று அரசு வழங்கிய பட்டாக்கள் வீடுகள் குடியேறிய 100 வீடுகள் எவ்வித அறிவிப்பு இன்றி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியராக பிரபு சங்கர் பொறுப்பேற்றதிலிருந்து சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிப்பதும் இல்லை எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாவட்ட ஆட்சியர் எதிர்ச்சி அதிகாரப் போக்கை கொண்டு தவறான நடவடிக்கையால் பழங்குடியினர் தலித் மக்கள் சிறுபான்மையினர் மிகவும் பிற்பட்ட மக்கள் ஏழை விவசாயிகள் நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்
Latest Thiruvallur News & Live Updates
தொழிலாளர்கள் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் வருவாய் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையினர் போன்றவர்களிடம் மட்டுமல்லாமல் காவல்துறையிடம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருவதால் சரி, சரியான அணுகுமுறை இல்லாததால் பல்வேறு போராட்டங்கள் உருவாகி மாவட்ட ஆட்சியரே மன்னிப்பு கேட்டு போராட்டங்களை வாபஸ் பெறுவது தொடர் நடவடிக்கையாக நடைபெற்று வருகிறது
ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் மோதல் உருவாகி சங்கங்கள் வாயிலாக கண்டன போஸ்டர் அடித்து ஆர்பாட்டம் நடத்தும் அளவிற்கு சென்று சமரசம் ஏற்பட்டு மீண்டும் மன்னிப்பு நிலை ஏற்பட்டது
இதே போன்று தான் வழக்கறிஞர்கள் மோதல் போக்கு உருவாகி மன்னிப்பு கேட்டு வாபஸ் பெறப்பட்டது இதேபோன்று விவசாயிகள் கூட்டத்திலும் மோதல் உருவாகி சமரசம் ஏற்பட்டது
மாவட்டத்தில் விரைவு சாலைகள் அமைக்க விவசாய நிலங்கள் குடியிருப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை மாவட்ட ஆட்சியர் மத்தியீஸ்வரராக இருந்தும் தீர்வு காணாமல் அனைத்து விவசாயிகளுக்கு துரோகம் கிடைக்கின்ற வகையில் நீதிமன்றங்களுக்கு செல்லுங்கள் என்று விவசாயிகளை மறைமுகமாக பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு துரோக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்
முந்தைய மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட விவசாயிகள் நலனின் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டனர்
தற்போது விவசாயிகள் நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட ஒழுங்கு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கும் ஆவடி துணை ஆணையர் அவர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டு அனைத்து அலுவலக முன்னிலையில் பகிரங்கமாக உருவாகியது
Thiruvallur News Paper Today
இதனால் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது
கடந்த வாரம் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜ்குமார் உத்தரவின் பெயரில் ஏழை குடிசை வீட்டில் இடிக்கை முற்பட்டு தீக்குளித்து ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டார் தற்போது அந்த குடும்பம் வீடு இல்லாமல் நடுவீதியில் வசித்து வருகிறது அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பு வழங்கப்படவில்லை வீட்டுமனையும் வழங்கப்படவில்லை
இது போன்று அடித்தட்டு மக்கள் நாள்தோறும் மாவட்ட நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றனர்
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றார் மக்கள் நலனுக்காக பாடுபடாமல் தன்னலம் மட்டுமே கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை செயல்படுத்துவதால் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்து போராடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்
News
இவை அனைத்தும் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரையும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அடாவடி போக்கையும் கண்டித்து வருகின்ற ஜூலை 23 அன்று திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவள்ளூரில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட செயலாளர் மு பாபு தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ் கோபால் விசிக மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் சிபிஐ மாவட்ட செயலாளர் கே கஜேந்திரன் ஒன்றிய நிர்வாகி குருமூர்த்தி மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் அனைத்து கட்சி உறுப்பினர்கள் திரளான கலந்து கொண்டனர்.