• முகப்பு
  • சென்னை
  • காட்டுப்பாக்கத்தில் தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசாரால் பொதுமக்கள் பீதி 

காட்டுப்பாக்கத்தில் தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசாரால் பொதுமக்கள் பீதி 

S.முருகன்

UPDATED: Jun 27, 2024, 8:36:21 AM

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது சென்னையின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் இந்த பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பகுதியாக மாறி வருவது அதிர்ச்சிகரமான செயலாக உள்ளது.

குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள செந்தூர்புரம் மெயின் ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாலிபர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் இளம் பெண்களை அச்சுறுத்தும் வகையில் கிண்டல் செய்வது என தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிக அளவில் நடந்து வருவது அதிகரித்துள்ளது குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்

அதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு செய்த வாலிபர்களை தட்டி கேட்க சென்ற போலீசாரையே தகராறு செய்த வாலிபர்கள் அடிக்க விரட்டி சென்றதும் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவரை நிற்க வைத்து அபாயகரமான முறையில் வாலிபர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது கஞ்சா போதையில் போலீஸ்காரர் ஒருவரை வெட்டியதும் இதே பகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது

பல்வேறு அடிப்படை வசதிகளுடன் காட்டுப்பாக்கம் வளர்ந்து வந்தாலும் இங்கு வசிக்ககூடிய பொது மக்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையிலும் தினந்தோறும் அச்சத்துடன் வசித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் யார் என தெரிந்தாலும் பூந்தமல்லி போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த பகுதி மக்களிடைய பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது

 

VIDEOS

Recommended