அனுமதியின்றி ஒப்பந்தக்காரர்கள் தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்;

செ.சீனிவாசன்

UPDATED: Sep 19, 2024, 10:16:05 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

திருக்குவளை தாலுக்கா மேலவாழக்கரை கிராமத்தில் வெள்ளையாற்றின் குறுக்கே பேருந்து வசதிக்காக புதிய இணைப்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்ற முடிந்துள்ளது.

இந்த நிலையில் பாலத்தின் கரையை பலப்படுத்துவதற்காக வாழக்கரை வழியாக ஏர்வைகாடு, ராமன்கோட்டகம், வல்லவிநாயகர் கோட்டம், செல்லும் பிரதான சாலையாக இருக்கக்கூடிய மேலவாழக்கரை சாலை ஓரத்தில் சீராவட்டம் வாய்க்கால் கரையிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் எந்த அனுமதியும் பெறாமல் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் உள்ள வண்டல் மண்ணை தோண்டி வெள்ளையாற்றின் குறுக்கே நடைபெறும் புதிய பாலத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.  

Latest District News in Tamil

இந்த சாலை வழியாக இரண்டு அரசு பேருந்துகளும் தனியார் கல்லூரி வாகனங்களும் விவசாய வாகனங்களும், 108 அவசர வாகனங்கள் சென்று வரும் நிலையில் சுமார் 15 அடிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என அச்சமடைகின்றன. மேலும் பள்ளத்தின் அருகே உயர் அழுத்த மின்கம்பி செல்லக்கூடிய மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது 

மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் சீராவட்டம் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொண்டுள்ள விளைநிலங்கள் பாதிப்பு அடையும் சூழல் ஏற்படலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

Breaking News Today In Tamil 

ஒப்பந்ததாரர்களிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக செயல்பட்டு சீராவட்டம் வாய்க்கால் கரையை உடைத்துள்ளனர். 

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்தக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விபத்து ஏற்படாமல் தடுத்திடும் வகையில் காங்கிரட் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended