தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் நிகழ்வு

எம்.கே.எம்.நியார்  - பதுளை

UPDATED: Oct 25, 2024, 2:29:48 AM

ஓட்டப்பந்தயத்தில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் நிகழ்வு. 

பதுளை விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரி மாணவிகள் கொழும்பில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் நாற்பது வருடங்களின் பின்னர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

original/1729776455555
 குறிப்பாக மகளிருக்கான 400Mமற்றும் 100×4அஞ்சலோட்டம் ஆகியவற்றில் மூன்றாம் இடத்தையும், 800M ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும், 400M ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்ற ரித்மி ஹேஷானி ஏபா, நதுனி ரஷ்மிகா, நதுனி கவிஷ்கா, பஷான்ஜலி பவித்யா,ரித்மி ஹேஷானி, மினுலி பிமல்யா ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பதுளை வலயக் கல்வி பணிப்பாளரின் பங்குபற்றுதலுடனும்,வித்தியாலய அதிபரின் தலைமையிலும் நடைபெற்றது.



VIDEOS

Recommended