திமுக ஊராட்சி மன்ற தலைவரால் வீடு கட்ட முடியாமல் மன உளைச்சலில் சிக்கி தவிக்கும் வாலிபர்.

லக்ஷ்மி காந்த்

UPDATED: Oct 29, 2024, 7:37:23 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள சந்தவேலூர் ஊராட்சியின் தலைவராக திமுக கட்சியை சேர்ந்த, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் வேண்டாமணி என்பவர் மீது, மக்களுக்கு எதிராக செயல்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் உள்ள நிலையில்,

சந்தவேலூர் ஊராட்சியில் கங்கா கார்டன் பகுதியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான 2400 சதுர அடி கொண்ட பட்டா இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை அகற்ற இடத்தின் உரிமையாளர் ஜி.ஞானசேகரன் வயது 28 என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி அவர்களை சந்தித்து தன்னுடைய பட்டா இடத்தில் உள்ள போர்வெல்லை அகற்றித் தருமாறு பலமுறை முறையிட்டுள்ளார்.

வேண்டாமணி இன்று அகற்றப்படும் நாளை அகற்றப்படும் என சுமார் ஒரு ஆண்டு காலமாக கூறிக்கொண்டே வந்துள்ளார். 

இதனால் தன்னுடைய பட்டா இடத்தில் வீடு கட்ட முடியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஞானசேகரன், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ,வருவாய்த்துறை என 18 கற்கும் மேற்பட்ட துறைகளுக்கு ஆன்லைன் மூலமும், நேரிலேயும் புகார் அளித்துள்ளார்.

ஞானசேகரின் புகாரின் அடிப்படையில் கள ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஞானசேகரனின் பட்டா இடத்தில் உள்ள போர்வெல் கிணற்றை அகற்றி தர கடிதம் மூலம் உத்திரவு கொடுத்துள்ளனர். 

இந்த உத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி அவர்களிடம் கொடுத்தப்போது நான் ஆளுங்கட்சியை சேர்ந்தவன், கட்சியில் எனக்கு பெரிய செல்வாக்கு உள்ளது என்னை தாண்டி எதுவும் செய்ய முடியாது எனக்கு ஒரு பெரிய தொகையை அளித்தால் போர்வெல்லை அகற்றி தருவேன் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய இடத்தில் வீடு கட்ட வேண்டாமணி தடையாக உள்ளதால், வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி அவர்களுக்கு போன் செய்து தெரிவித்த போது, ஸ்ரீபெரும்புதூர் உதவி பொறியாளர் பாளையம் அவர்கள் உங்களுக்கு ஏற்கனவே போர்வெல்லை அகற்றி கொள்ள ஆர்டர் கொடுத்து விட்டோம் .எனவே யோசனை செய்யாமல் அந்த போர்வெல்லை இடித்தள்ளிவிட்டு நீங்கள் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

அரசு புறம்போக்கு இடங்களில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ள நிலையில் இந்த போர்வெல்லை அகற்ற, எனக்கு ஏதாவது தொகை கொடுங்கள் என வேண்டாமணி வற்புறுத்தி வருவதும், அரசாங்கத்தின் உத்தரவையே மதிக்காமல் இப்படி அட்டூழியம் செய்வது எனக்கு பெரும் மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது என ஞானசேகரன் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் என்னுடைய இடத்தில் உள்ள போர்வெல்லை அரசு அதிகாரிகள் அல்லது ஊராட்சி மன்ற தலைவர் முறையாக அகற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல துறை அரசு அதிகாரிகள், "தனி நபருக்கு சொந்தமான பட்டா இடத்தில் போர்வெல் போட்டது தவறு", அதை அகற்றி தரவேண்டும் என உத்தரவு இட்டபின்னரும் அதை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இப்படி நடந்து கொள்வது கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 

பேட்டி .ஜி

ஞானசேகரன் இடத்தின் உரிமையாளர்

 

VIDEOS

Recommended