வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் பெயர்

ராஜ்குமார்

UPDATED: Nov 24, 2024, 8:24:20 AM

தென்காசி மாவட்டம்

சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் பெயர் உள்ளதால் உடனடியாக பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாம்பவர் வடகரை பேரூர் திமுக செயலாளர் முத்து தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாம்பவர்வடகரை பேரூராட்சியில் மொத்தம் பூத் எண்கள் 300 முதல் 317 வரை 18 பூத் உள்ளது‌.

வாக்காளர் பட்டியல்

இதில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்கள் பெயர்கள் மற்றும் ஒரு சிலருடைய வாக்குகள் இரண்டு பாகங்களிலும் டபுள் என்ட்ரி ஆகி தற்போது வெளிவந்த வாக்காளர் பட்டியலில் உள்ளது. 

இறந்தவர்களின் வாக்குகள் மட்டுமே பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் நூற்றுக்கணக்கில் உள்ளது. இறந்தவர்கள் பெயர் மற்றும் டபுள் என்ட்ரி பெயர்கள் என 500 க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் இதே போல் உள்ளது.

ஆகையால் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கமல் கிஷோர் இது குறித்து உரிய ஆய்வுகள் செய்து இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யுமாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended