• முகப்பு
  • லஞ்சம்
  • பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் திருச்சியில் கைது - லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் திருச்சியில் கைது - லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.

JK

UPDATED: Jul 23, 2024, 1:28:42 PM

திருச்சி

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா என்பவரது மகன் முனியப்பன்(59) இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 

திருச்சி கொட்டப்பட்டில் கடந்த மாதம் 1200 சதுரஅடி மனையினை வாங்கினார். அந்த மனையினை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பித்து ஒரு மாதம் கடந்த நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு சென்று சர்வேயர் முருகேசன்(34) சந்தித்து தனது பட்டாவின் பெயர் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். சர்வேயர் முருகேசன் முனியப்பனின் மனையினை ஆய்வு செய்து தர 15,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை

முனியப்பன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறவும் முருகேசன் 5000 ரூபாய் குறைத்துக் கொண்டு பத்தாயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என கூறிவிட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம்  புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் குழுவினர் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

Latest Trichy News Headlines & Updates

சர்வேயர் முருகேசனிடம், முனியப்பன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக சர்வேயர் முருகேசனை பிடித்தனர். 

தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வட்டாட்சியர் முருகேசனை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

Recommended