• முகப்பு
  • குற்றம்
  • மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பாக்குகள் விற்பனை செய்த 45 வயது பெண்மணி.

மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பாக்குகள் விற்பனை செய்த 45 வயது பெண்மணி.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 20, 2024, 8:41:19 AM

காஞ்சிபுரம் 

திமுக அரசு ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் போதை கலாச்சாரம் பல ரூபங்களில் வேரூன்றி வருகின்றது.

இதில் தொழிலாளர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலையை சில சமூக விரோத கும்பல்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் செய்து வருகின்றனர்.

Latest Crime News Today In Tamil 

இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த விதமான உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காததால் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களும் இதை கண்டு கொள்வதில்லை. அதனால் போதை பொருட்கள் பல ரூபங்களில் உருவெடுத்து அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒட்டிய பகுதியான விநாயகபுரம் பகுதியில் அப்பளத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

Breaking News today in Tamil 

அதேபோல் தனியார் நிறுவன பேருந்துகளின் பார்க்கிங் பிளேஸ் இடமாகவும் விளங்குகின்றது. இதே பகுதியில் எஞ்சினியரிங் கல்லூரி , ஆர்ட்ஸ் கல்லூரி மற்றும் அரசுத்துறை சார்ந்த போக்குவரத்து நிறுவனங்கள், நுகர்பொருள் வாணிப கிடங்கு என பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றது.

காஞ்சிபுரம் வேலூர் செல்கின்ற சாலையில் விநாயகபுரம் பகுதியில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் என்பவருக்கு வந்த தகவலை அடுத்து விநாயகம் புரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு திடீர்னு புகுந்து ஆய்வு செய்தனர்.

Latest Kancheepuram District News 

கடை மற்றும் கடைக்கு பின்புறமாக உள்ள வீட்டிலும் ஆய்வு செய்தபோது , கடையம் மட்டும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 351 பவுச் பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டது. 

தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல்லிப் விமல் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடையின் உரிமையாளரான ஆனந்தி வயது 45, என்பவர் கைது செய்யப்பட்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கடைக்கு சீல் வைப்பது குறித்து நாளை அந்த துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended