இறந்து போன பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் எடுத்து சென்ற உறவினர்கள்.
S.முருகன்
UPDATED: Aug 29, 2024, 8:01:04 AM
பூந்தமல்லி
திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி(45), இவர் நேற்று இரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளார்
இதையடுத்து ஜெயந்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Breaking News
இதனை நம்பாமல் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்களும் ஜெயந்தி இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயந்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜெயந்தியின் உடலை காரில் வைத்து வீட்டிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Latest News
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பனியில் மீண்டும் ஈடுபட்ட போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து ஜெயந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து போன பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.