தொடர் மழையின் காரணமாக விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி, நெற்பயிர் முளைவிட்டு நாற்றாக மாறுவதால் விவசாயிகள் கவலை.
லக்ஷ்மி காந்த்
UPDATED: Aug 16, 2024, 6:49:44 PM
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்
ஒன்றியத்திற்குட்பட்ட நெய்யாடுபாக்கம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நடப்பாண்டு குண்டு பருவத்திற்கான நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதில், சிலர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் பலர் அறுவடைக்கு தயாராகி இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நெய்யாடுபாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி நெல் விதைகள் முளைத்து நாற்றாக மாறி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Latest District News
ஏற்கனவே, பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, பெய்து வரும் காற்று மழையால் நெல் பயிர் சாய்ந்து விளைநிலங்களில் நெல் பயிர் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்கள் விளைநிலங்களில், காற்று மழையினால் கீழே சாய்ந்துள்ளதால் விவசாய கூலியாட்கள் மூலமாக அதை அறுவடை செய்து கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நஷ்டத்தை சமாளிக்கலாம் என்றால் அதற்கும் விவசாய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை எனக்கூறி வருத்தப்படுகின்றனர்.
விவசாயம்
நெய்யாடுப்பாக்கம் விவசாயி குமாரி என்பவர் கூறும் போது, கடன் வாங்கி குண்டு நெல் பயிரிட்டேன் விளைச்சலுக்கு இன்னும் சிலர் தினங்களே உள்ள நிலையில் அனைத்து நெல் கதிர்களும் நீரில் அழுகி முளைத்து வருகின்றது என கண்ணீர் மல்க பேசினார்.
எனவே, சேதமடைந்த நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.