- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புறக்கணிக்கப்படுகிறதா ? சுரண்டை நகராட்சி, வளர்ச்சி திட்ட பணிகள் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி.
புறக்கணிக்கப்படுகிறதா ? சுரண்டை நகராட்சி, வளர்ச்சி திட்ட பணிகள் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி.
ராஜ் குமார்
UPDATED: Oct 23, 2024, 12:50:47 PM
தென்காசி மாவட்டம்
கடந்த ஆட்சி காலத்தில் தென்காசி மாவட்டம் உதயமானது
தென்காசி மாவட்டம் உருவாகும் போது தென்காசி மாவட்டத்தில் மிக முக்கியமான வர்த்தக நகரமாகவும் சுமார் 65 ஆயிரம் மக்கள் தொகை 30 ஆயிரம் வாக்காளர்கள் சுமார் 200 கிராமங்களுக்கு தாய் கிராமம் என முக்கிய நகரமாக வளர்ந்து வரும் சுரண்டைக்கு பல அரசு அலுவலகங்களும் வசதிகளும் கிடைக்கும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இதுவரை சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தவிர வேறுஷ எந்த புதிய அரசு அலுவலங்களோ வசதிகளோ ஏற்படுத்தும் அறிவிப்பு இல்லை. அதிலும் இன்னும் நகராட்சிக்கான அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை
சுரண்டை
இந்நிலையில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் போக்குவரத்து வசதியில் தன்னிறைவு பெறவும் நிர்வாக வசதிக்காகவும் டீசல் மற்றும் டிரிப்புகளை சேமிக்கவும் வசதியாக அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என 35 வருடமாக தொடர் கோரிக்கை விடுத்தும் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கலாம் என போக்குவரத்து கழகத்தில் இருந்து கருத்துரு அனுப்பியும் பலமுறை கிடப்பில் போடப்பட்டுள்ளது
இது தொடர்பாக தென்காசி தொகுதியின் மிக முக்கியமான 10 கோரிக்கைகளில் பிரதானமான கோரிக்கையாக தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரால் தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டும், அதற்கான இடம் பரிசீலனை செய்யப்பட்டும் இது வரை பஸ் டெப்போ அமைக்கபடவில்லை இதனால் போதிய பஸ் வசதி கிடைக்கவில்லை அதற்கான காரணமும் தெரியவில்லை
அதேபோல் சுரண்டைமில் 50 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். என்ற பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில் கடந்த 29-10-2010 அன்று திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய சுகாதாரதுறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் அடிக்கல் நாட்டப்பட்டும் இதுவரை ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. இது குறித்தும் தொகுதியின் 10 முக்கிய கோரிக்கையில் தென்காசி எம்எல்ஏவால் கோரிக்கை அளிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.
Latest Thenkasi District News
சுரண்டையை சுற்றியுள்ள போலீஸ் ஸ்டேசன்களை (சுரண்டை , வீரகேரளம்புதூர், சாம்பவர்வடகரை, ஆயக்குடி, சேர்ந்தமரம்) உள்ளடக்கி டிஎஸ்பி ஆபிஸ், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் இதுவரை நோ ரெஸ்பான்ஸ்,
சுரண்டையில் இருந்து ஊத்துமலை வரையிலான இரட்டை குளம் கால்வாய் பணிகளுக்கு நிதி ஒதுக்க சுமார் 55 வருடமாக குரல் எழுப்பியும் பல முறை திட்டங்கள் நீட்டியும் ஏதும் நடக்கவில்லை
திமுக தேர்தல் அறிக்கை
சுரண்டையில் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அது சுரண்டையில் அமைக்க பரீசீலனை செய்யப்பட்டும் சுரண்டையில் அமைக்கப்பட்டால் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்தும் இது வரை இது தொடர்பாக எம்பி சம்பந்தப்பட்ட அமைச்சரையோ, அதிகாரிகளையோ நேரில் சந்தித்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை இது தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பரிசீலனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
சுரண்டை பகுதியின் வழக்குகளை விரைந்து விசாரணை நடத்த சுரண்டையில் சப்கோர்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்க படவில்லை
சுரண்டையை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்துகள் கீழப்பாவூர், ஆலங்குளம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பஸ் வசதியே இல்லாத மேலநீலிதநல்லூர் ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ளன இதனால் இப்பகுதி மக்கள் யூனியன் ஆபிஸ் தொடர்பான பனிகளுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர் ஆகவே சுரண்டையை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது
மேலும் சுரண்டையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, இராமேஸ்வரம், தேனி, போடி, குமுளி, மதுரை, கோவில்பட்டி, இருக்கன்குடி, கேரளா மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லை அதனை இயக்க வலியுறுத்தியும் நடக்கவில்லை
ஏற்கனவே தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்டத்தின் மைய பகுதியான சுரண்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் அதற்காக 30 ஏக்கர் இடத்தை இலவசமாக தர இப்பகுதி மக்கள் உறுதியளித்தும் அது குறித்து பரிசீலிக்கப்பட்டும் அமைக்கப்பட்டால் நிலையில் பிற அலுவலகங்களாவது அமைக்கப்படும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதது கடும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது
தென்காசி பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பகுதியான சுரண்டை பகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இதனை நிறைவேற்றுவேன் என்பதும் இவைகள் ஒவ்வொரு தேர்தலிலும் மீண்டும் வாக்குறுதியாக வருவதும் தொடர்கதையாகி வருகிறது
அதேபோன்று ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில், வீர சிகாமணி, சுரண்டை வழியாக அத்தியூத்து வரை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும்
ஆகவே இப்பகுதி பொதுமக்களின் ஏமாற்றுபவர்களை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அரசு சுரண்டை பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
ஏற்கனவே இக் கோரிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமான நிலையில் திமுக அரசு நட்ப்பு நிதியாண்டில் அதனை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர் நிறைவேற்றுமா அரசு
இன்று தென்காசி மாவட்டத்தில் வருகை தரும் பொதுத்துறை மதீப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்