200 நாட்களில் 595 கொலைகள் கொலைக்களமாக மாறும் தமிழகம்

கார்மேகம்

UPDATED: Jul 20, 2024, 12:40:53 PM

எடப்பாடி பழனிசாமி 

தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன ( கொலைக்களமாக) தமிழகம் மாறிவருகிறது மக்களை காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளார்.

படுகொலைகள்

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி‌ பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தி.மு.க. ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும் பல கொலைகளில் ஈடுபட்ட‌  கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்

ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரும் வக்கீலுமான ( ஆம்ஸ்ட்ராங்) கொலை  சம்பவத்தில் கூட சிலர் சரண் அடைந்துள்ளதும் அதில் ஒருவரை சென்னை போலீசார் என் கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.

காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படு கொலை சேலம் மாநகர்  மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

Latest Political News In Tamil

கொலைக் களமாக மாறும் தமிழகம்  இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளை  தவிர ஏனைய குற்றங்களில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை உண்மை இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது 2021 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் தலைநகரம் சென்னை  கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில் கடந்த 200 நாட்களாக தமிழகமே  கொலை களமாக மாறியுள்ளது‌ மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு  ஜனவரியில் 80 கொலைகளும் பிப்ரவரியில் 64 கொலைகளும் மார்ச்சில் 53 கொலைகளும் ஏப்ரலில் 76 கொலைகளும் (மே ) மாதம் 130 கொலைகளும் சூனில் 104 கொலைகளும் ஜூலை இந்த மாதம் 17 ந்தேதி வரை 88 கொலைகளும் என மொத்தம் சுமார் 200/ நாட்களில் 595 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மட்டும் 86 கொலை

தமிழகத்தில் சென்னையில் மட்டும் 86 கொலை சம்பவங்கள் அரங்கேறி  முதலாவது இடத்தை பிடித்துள்ளது 

2 வது மதுரையில் 40 கொலை சம்பவங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 35 - ம் விருது நகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே 3 வது 4 இடங்களை பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற இருமாப்போடு இனியும்  செயல்படாமல் சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்

கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து போலீஸ் துறையை தங்களின் சுய நலத்திற்காக ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால் அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை நிணைவூட்டுகிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended