பள்ளி மாணவர்களை தாக்கிய திமுக ரவுடிகும்பல் மாணவர்களை விசாரணை என்ற பெயரில் கை எலும்பினை முறித்து அராஜகமாக நடந்துகொண்ட பேரளம் காவல் ஆய்வாளர்.
தருண் சுரேஷ்
UPDATED: Oct 12, 2024, 11:34:45 AM
திருவாரூர் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொங்கராயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலசகடமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் விஷ்வா. அருகில் உள்ள அக்கரைசகடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ராகவன் ஆகிய இருவரும் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இவ்விருவரும் நேற்று 10ம் தேதி மாலை பள்ளியை விட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பும்போது அப்போது மாணவர்கள் சக மாணவர்களுடன் விளையாட்டாக ரோட்டில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு வந்துள்ளனர்.
அப்போது திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அங்கு நின்றுகொண்டிருந்த கொத்தவாசல் பகுதியை சேர்ந்த திமுகவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் மாணவர்கள் இருவரையும் விரட்டி விடிட்டி அடித்து கொலைவெறியுடன் கடுமையாக தாக்கினர்.
மாணவர்கள் தாக்கப்படுவதை கண்ட அப்பள்ளியின் சக மாணவர்கள் என்ன செய்வது என தெரியாமல் அங்கும் இங்கும் பதற்றத்துடன் ஒடினர்.
சாலையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களும் மாணவர்கள் கடுமையாக தாக்கப்படுவதை தடுக்க முடியாமல் அருகில் உள்ள பேரளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்குவந்த பேரளம் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா அப்பகுதி திமுக நிர்வாகிகளின அறிவுறுத்தலின்படி இச்சம்பவம் குறித்து யாரிடமும் விசாரணை செய்யாததோடு, அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதவினையும் ஆய்வு செய்யாமல் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் விஷ்வா, ராகவன் ஆகிய இருவரையும் பேரளம் காவல் நிலையத்திற்கு விசாரனை என்ற பெயரில் அழைத்து சென்ற பேரளம் காவல் ஆய்வாளார் கடுமையாக தாக்கி இரவு 8 மணி வரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் விஷ்வா என்ற மாணவனது கையை வளைத்து அடித்த காவல்துறையினரின் நடவடிக்கையால் அவனது இடது முழங்கை 2 விரலில் எலும்பு முறிந்தது. தற்போது மாணவன் விஷ்வா திருவாருர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது திமுக ரவுடி கும்பல்; போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில், சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்றுகொண்டிருக்க பள்ளி மாணவர்களை ஓடஓட விரட்டி தாக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவத்தை விசாரணை செய்யாமலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்யாமலும் ஒருதலைபட்சமாக மாணவனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அராஜகமாக நடந்துகொண்ட பேரளம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சக பள்ளி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.