ராமேஸ்வரத்தில் 5 வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் ரூ.5 கோடி ரூபாய் அன்னிய செலாவணி இழப்பு

கார்மேகம்

UPDATED: Jul 13, 2024, 6:03:31 AM

Ramanathapuram District News in Tamil

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 5 வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதனால் அரசுக்கு ரூ.5 கோடி ரூபாய் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளன.

( மீனவர்கள் வேலை நிறுத்தம்)

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள்  பிடித்து வரக்கூடிய இறால் நண்டு கணவாய் காரல் சங்காயம் உள்ளிட்ட வகை மீன்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள்  மற்றும் வியாபாரிகள் விலையை குறைந்து விட்டதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் நண்டு கணவாய் காரல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 5 வது நாளாக விசைப்படகு மீனவர் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதனால் 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல்  துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

( ரூ. 5 கோடி அன்னிய செலாவணி இழப்பு)

மீனவர்களின் 5 வது நாள் தொடர் போராட்டத்தால் அரசுக்கு சுமார் 5 கோடி  ரூபாய் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளன மேலும் மீனவர்களின் 5 வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதைச் சார்ந்த மீனவ தொழிலாளர்களும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்

எனவே இது குறித்து தமிழக அரசு தலையீட்டு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

VIDEOS

Recommended