- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கழிவுநீர் கலந்த குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு.
கழிவுநீர் கலந்த குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு.
JK
UPDATED: Aug 17, 2024, 1:18:52 PM
திருச்சி
திருச்சி மாநகராட்சியின் 17,19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட கள்ள தெரு, சுண்ணாம்புகார தெரு, ஜாஃபர்ஷா தெரு, பெரிய கடை வீதி, சௌராஷ்ட்ரா தெரு, சந்துக்கடை, ராணித்தெரு, பாபுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகளும் மர்ம காய்ச்சலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Latest District News in Tamil
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பலர் பலியாகி விட்டதாகவும் அந்த பகுதியில் கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிமுக முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான சீனிவாசன் தலைமையில், அதிமுக பகுதி கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் பொக்லின் இயந்திரம் கொண்டு குழாய்கள் செல்லும் பகுதியை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்தது.
Breaking News Tamil
அவற்றைப் பார்வையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம், முன்னாள் துணை மேயர் என்ற முறையில் பணிகளை துரிதப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், குடிநீர் குழாயும், பாதாள சாக்கடை குழாயும் இணைந்து செல்லக்கூடிய இடங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைத்து இரு வேறு குழாய்களையும் வேறுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டால், ரப்பர்களை சுற்றி தற்காலிகமாக அடைப்பதை தவிர்த்து, முறையாக அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Today News Trichy Tamilnadu
சுகாதாரம் இல்லாத குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்டபொதுமக்கள் சார்பில் பேராசிரியர் ரங்கநாதர் என்பவர் கூறுகையில்
வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது மருத்துவர்கள் தண்ணீர் மூலமாக தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியதாகவும்,
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிக்க காலதாமதம் ஆகி வரும் நிலையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக
மேலும் அந்த பகுதி பொதுமக்கள் உயிருக்கு பயந்து கேன்களில் விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மாநகராட்சி விரைந்து போர்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.